பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை பேராசிரியர் டாக்டர் பெ.கிருஷ்ணன் தமிழர் வாழ்வில் சைவமும் தமிழும் இணைந்தே வளர்ந்து வந்துள்ளன என்பது வரலாற்று உண்மை. பழந்தமிழ் நூற்களில் சிவன் என்ற சொல் எழுத்தாளப் படவில்லை. எனினும் சிவனின் பண்புப் பெயர்கள் பல காணப்படுகின்றன. 'செம்மை என்ற தமிழ்ச் சொல்லை அடிப்படையாகக் கொண்டே 'சிவன் என்ற சொல் வந்தது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ‘சிறந்தது பயிற்றல்’, சிறப்பெனும் செம்பொருள் போன்ற தொடர்கள் ஆதாரங் களாக அமைகின்றன. தமிழர் நாகரிகம் சிந்துச் சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சி என்பதை ஏற்றால், சைவ சமயம் வேத நாகரிகத்திற்கும் முற்பட்டது எனக் கொள்ள வேண்டும். சங்க காலத்திற்குப் பின் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பெளத்தமும் சமணமும் செல்வாக்குப் பெற்று விளங்கின. சைவம் வலிகுன்றிய நிலையில் இருந்தது. பிராகிருதம், பாலி மொழிகள் சிறப்புற்று விளங்கின. எனினும், சமணம் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளவும் வளர்ச்சி அடையவும் வேண்டுமானால் தமிழில் கொள்கைகள் விளக்கப்பட வேண்டும் என்பதைச் சமணர்கள் உணர்ந்தனர். உயர்ந்த சமண சமய அறநெறிக் கருத்துக்களைக் கொண்ட பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் களப்பிரர் ஆட்சிக்காலத்தில் தோன்றின. பேராசிரியர் துறைத்தலைவர் சைவ சித்தாந்தத் துறை, சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை 600 005.