பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் (ஆ) உருவநிலை: இறைவன் இந்நிலையினின்றும் நீங்கி உலகத்தை நோக்கி ஐந்தொழில் புரியப் புகுமிடத்து தடத்த சிவன் என்ற பெயரைப் பெறுகின்றான். விண் வெளியில் ஒளிரும் கதிரவன் மண் வெளியில் தன் ஒளிக் கிரணங்களால் வியாபித்து நிற்பதைப் போலவே, மேலிடத்தில் உள்ளோனாகிய இறைவன் தனக்குக் கீழுள்ள உலகத்தில் தன் சக்தியினால் வியாபித்து நிற்கின்றான். இதுபற்றியே இந்நிலை யைச் சக்தி என்றே வழங்குகின்றனர் சித்தாந்திகள். ஒரு சக்தியே செயலால் பலவகையாகப் (சுடும் சக்தி, அடும் சக்தி, ஒளிறும் சக்தி முதலியவை) புலப்படுவது போலவே, இறைவனது சக்தியும் பலவகைகளில் புலப்பட்டுப் பல்வேறு பெயர்களைப் பெறுகின்றது. இறைவனது மேலான பராசக்தி உலகத்தை நோக்கும்போது ஆதிசக்தி என்ற பெயரைப் பெறுகின்றது. இதன் பரிணாம வடிவங்கள் முன்னரே விளக்கப் பெற்றுள்ளன." இதனைச் சிவஞான சித்தியார், ஒன்றாய், இச்சா ஞானக் கிரியை யொன் றொருமூன் றாகி நின்றிடும் சக்தி; இச்சை . உயிர்க்கருள் நேச மாகும்; நன்றெல்லாம் ஞான சக்தி யால்நயந் தறிவன் நாதன், அன்றருட் கிரியை தன்னால்' ஆக்குவன் அகில மெல்லாம்." என்று பேசும். - இங்ங்னம் மேற்கூறிய சக்திகளைக் கொண்டே இறைவன் தன் தொழில்கள் அனைத்தையும் செய்கின்றான். இதனை, ,• х - 52. இந்நூல் - பக். 48 53. சித்தியார் . 1.63