பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 1 (பதி) 77 நங்கையினால் நாம்அனைத்தும் செய்தாற்போல் நாடனைத்தும் நங்கையினால் செய்தளிக்கும் நாயகனும்' என்று மிக அழகாகக் கூறும் திருக்களிற்றுப்பாடியார். குணமும் குணியும் வேறல்லவாயினும் செலுத்துவது குணி, செலுத்தப் படுவது குணம். எனவே, குணி செலுத்தியபடியே குணம் செல்வதல்லது வேறாகச் செல்லாது. அதனால் சக்தி மனைவி என்றும், சிவம் கணவன் என்றும் கொள்ளப்படுகின்றன. இது பற்றித்தான், மேற்குறித்த களிற்றின் பாடலில் சக்தி நங்கை என்றும், சிவன் நாயகன் என்றும் கூறப்பட்டன என் பதைத் தெளியலாம். சிவபெருமான் தனது ஒருபாதி ஆணு ருவமாகவும், மற்றொரு பாதி பெண் உருவமாகவும் உள்ளான் என்று சொல்லுவதும் முதல்வன் ஒருவனே சிவமும் சக்தியும் என இருதிறப்பட்டு இயைந்து நிற்றலையே குறிப்பதாகும். மற்றும் சிவமூர்த்தங்கள் பலவும் அம்மை உடனாகக் காணப் படுவதும் இவ்வுண்மையை விளக்குவதாகும் என்பதையும் தெளியலாம். ஐந்தொழில்கள்-அருள்தொழில்கள் என்பதை நாம் அறிவோம். இதனை மேலும் விளக்குவோம். குணம் குணி வழியே செயற்படுமாதலால் சக்தி சிவத்தின் வழியே நிற்பதாகும் என்பதை நாம் அறிவோம். இறைவன் அயனாய் நின்று படைத்தல் தொழிலைச் செய்ய நினையுங்கால் அவனது சக்தி வாணி என நிற்கும். இறைவன் அரியாய் நின்று காத்தல் தொழிலைச் செய்ய நினையுங்கால் அவனது சக்தி திருமக ளாய் நிற்கும். இறைவன் அரனாய் நின்று அழித்தல் தொழிலைச் செய்ய நினையுங்கால் அவனது சக்தி உமையாய் நிற்கும். மறைத்தலை இறைவன் மகேசுவரனாய் நின்று 54. களிறு 78