பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 1 (பதி) 79 இறைவன் படைத்தல் உயிர்களின் வினை தீர்த்தற்பொருட்டு; காத்தல் வினையை நுகர்வித்தல் பொருட்டு; அழித்தல் இளைப்பு நீங்குதற் பொருட்டு, மறைத்தல் மலபரிபாகம் அடைதற் பொருட்டு அருளல் பேரின்பத்தை அடைதற் பொருட்டு. இந்த விளக்கமும் உளங்கொள்ளத் தக்கது. இன்னும் ஒரு கருத்து மறைத்தல் உயிர்கட்குப் பந் தத்தை (கட்டினைச் செய்வது; அருளால் உயிர்கட்கு வீட்டினை (விடுதலையை)த் தருவது. ஆகவே ஐந்தொழில் களையும் பந்தம்-வீடு' என்று இருதொழில்களாகவே பேசப்பெறும் மரபும் உண்டு. படைத்தல் முதலிய மூன்றும் ஒரு வகையில் மறைத்தலேயாகும். பந்தம் வீடவையாய பராபரன்' என்பது நாவுக்கரசரின் நன்மொழி. பந்தமும் வீடும் படைப்போன் காண்க." என்பது மணிவாசகரின் மணிமொழி. பந்தம் வீடுதரும் பயன்' என்பது சேக்கிழார் பெருமான் அநுபூதி நிலையில் அருளியது பந்தம்,வீடு' என்ற கருத்து திருமுறைகளுள் பலவிடத்தும் வருதலைக் காணலாம். இறைவன் செய்யும் ஐந்தொழில் மூவகைப்படும். அவை துல ஐந்தொழில், சூக்கும ஐந்தொழில், அதிசூக்கும ஐந்தொழில் என்பனவாகும். உலகத்தைப் படைத்துக் காத்து அழித்து மறைத்து அருளுவது தூலஐந்தொழிலாகும். உலக 55. திருநாவு. தேவா. 5.7:12 56. திருவா. திருவண்டப்பகுதி - அடி 52 57. பெ.புரா. தடுத்தாட்கொண்ட புராணம் - 154