பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் 1 (பதி) 81 இறைவன் திருப்பெருந்துறையில் தம்மையாட்கொண்ட அருமைப்பாட்டினை மணிவாசகப் பெருமான். 'கோகழியாண்ட குருமணி' 'ஈர்த்து எனையாட் கொண்ட எந்தை பெருமான்' 'குருந்தின்கீழ் அன்றிருந்த கொள்கையும்." என்று பேசுவர். தாயுமான அடிகளும் இறைவன் குருவாய் வந்தமையைப் புத்தமிர்த போகமும்' என்ற பாடலாலும் குருஉபதேசம் செய்ததை வந்தேன் உடல் பொருள் ஆவி' என்ற பாடலாலும் குறிப்பிடுவர். . . இறைவன் ஐந்தொழில் செய்யுமிடத்து உயிர்களின் மேலுள்ள கருணையாகிய இச்சாசக்தி இறைவனுக்கு எஞ் ஞான்றும் ஒரு தன்மையதாகவே இருக்கும். ஏனைய ஞான சக்தியும் கிரியாசக்தியும் அடங்குதல், மிகுதல், குறைதல் என்னும் தன்மைகளை அடையும். இந்நிலைகள் பற்றி இறைவனும் பல நிலைகளையுடையனாய் இருப்பான். இந்நிலைகள் ஒருவகையில் ஐந்தாகவும்" மற்றொரு வகையில் ஒன்பதாகவும் கூறப்பெறும். ஒன்பதாகக் கூறப்பெறுவதை ஈண்டுக் காட்டுவேன். நவந்தருபேதம்: ஞானமும் கிரியையும் தனித்தனியாகத் தொழிற்படும் நிலையில் பொதுவாகத் தொழிற்படுதல், சிறப்பாகத் தொழிற்படுதல் என இரண்டாகி நிற்கும். ஞானம் 58. திருவா. சிவபு. அடி 3. கோகழி - திருப்பெருந்துறை 59. மேலது. அடி 74 60. மேலது. கீர்த்தித் திருவகவல் - அடி 6 61. தா.பா. தேசோமயானந்தம் - 11 62. மேலது . ஆகார புவனம் - 18 63. ஐந்தாகக் கூறப்பெறுவதை இந்நூல் பக்.72-ல் காண்க.