பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் 1 (பதி) 83 மேனிகள் நான்கும் அதிகாரம் (தலைமைப்பாடு) எனவும் அருவுருவத்திருமேனி போகம் எனவும், அருவத்திருமேனி நான்கும் இலயம் எனவும் வழங்கப்படும். அதனால் இந்நிலைகளில் நிற்கும் பொழுது இறைவனும் அதிகாரசிவன், போக சிவன், இலயசிவன் என்று சொல்லப்பெறுவான் (இலயம்-ஒடுக்கம்). ஆகவே இறைவனின் தடத்த நிலையை நோக்குமிடத்து யோகம் அதிகாரம் நிலையை நோக்குமிடத்து 'இலயம், யோகம் அதிகாரம் என மூன்றாய் அடங்கும் என்பதை உணர்ந்து தெளிதல் வேண்டும். வித்தியேசுவரனாய் நின்று இறைவன் புரியும் செயல் களைச் சற்று விரிவாக விளக்குதல் வேண்டும். இறைவன் உயிர்கட்குப் போகம் முதலியவற்றைச் செய்யுங்கால் தானேயாயும் செய்வன், பிறரைக் கொண்டும் செய்விப்பன், அவற்றுள் தானே செய்யுங்கால் மகேசுவரனாய் நின்று செய்வன். பிறரைக் கொண்டு செய்விக்குங்கால், அவற்றை அவ்வாற்றால், நோக்குதல் பெரிதாகவும் கருதுதல் சிறிதாகவும் நிகழ வித்தியேசுவரன் என்னும் நிலையில் நின்று செய்விப் பன். இந்நிலையில் செய்விப்பது பொதுப்பட ஒன்றாயினும், சிறப்பினால் பலவாய் நிற்கும். அரசன் (மக்களாட்சியில் முத லமைச்சன்) ஆணையைப் பெற்று ஆட்சிமுறைக் கடமை களில் சிலவற்றைச் செய்யும் அமைச்சர்கள் போல; இறைவன் ஆணையைப் பெற்று உலகத்தைச் சிலவகைகளில் தொழிற் படுத்தும் சிறந்த தலைவர் சில உளர். அவர்கள் அனந்த தேவர், சீகண்டருத்திரர், திருமால், அயன் என்போர். மற்றும் இந்திரன், வருணன், வாயு, அக்கினி சூரியன், சந்திரன், நாள், கோள் முதலான எண்ணற்ற தலைவர்களும் உளர். இவர்கள் பெற்றுள்ள வடிவும் பெயரும் அவரவர்கள் ஆற்றும் தொழிலுக்கேற்ப அமைந்தனவாகும். இவற்றை இவர்கள் தம்புண்ணிய விசேடத்தால் பெற்றவர்கள். இவர்கள் இவ்வாற்