பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் றால் இயக்குவதற்கு அமைந்த நிலையே வித்தியேசுவர நிலையாகும். எனவே, இந்நிலையில் நோக்கப் பெறுவோரது நிலைபற்றி இறைவனும் பல்வேறு நிலையினனாய், அவ்வப் பெயரைப் பெற்று நிற்பன் என்பது விளங்கும். இவன் போகியாய் நில்லாதவழி போகமும், யோகியாய் நில்லாதவழி யோகமும் உயிர்கட்கு அமையாது என்பது நாம் அறிவோம். அங்ங்னமே இறைவன் அனந்தர் முதலிய நிலையினனாய் நில்லாதவழி அவ்வத்தலைவருக்கு அவை அமையா. ஆதலின், அவர்பொருட்டு இறைவன் அப்பல்வேறு நிலையி னைாய் நிற்பன் என்பது அறிந்து தெளியப்படும். 'அனந்தர், உருத்திரர், மால், அயன் என்னும் பெயர்கள் முழுமுதற் கடவுளாகிய இறைவனையும், அவ்வத்தொழில் மட்டிற்கும் முதல்வராய் நிற்கும் தலைவர்களையும் குறிப்பன வாக வரும். இப்பெயர்கட்குரிய இறைவனது நிலைகள் சம்பு பட்சம் (சம்பு-சிவன், இறைவன்) என்றும் இப்பெயர்களுடைய தலைவர்களின் நிலைகள் அனுபட்சம் (அணு-உயிர்கள்; பட்சம்-பகுதி) என்றும் வழங்கப்பெறும். இவர்களை இனங்காணல் திருமுறை இலக்கியங் களில் உருத்திரன் மால், அயன் முதலான பெயர்கள் வருமிடத்து இவை சம்புபட்சமாகிய சிவபிரானது நிலையையும் அனுபட்சமாகிய பிறதேவர்களின் நிலையையும் குறிக்கின்றன என்பதை அறிதல் எவ்வாறு? பாடல்களில் முன்னும் பின்னும் வருகின்ற சொற்குறிப்புகளால் அவற்றை உணர்ந்து கொள்ள லாம். அதாவது சிவபிரானாயினும் ஏனைய தேவர்களாயினும் அவரவர்க்குரிய சிறப்பியல்கள் உள்ளன. அச்சிறப்பியல்பு களை முதன்மையாகவும் ஏனையவற்றைப் பொதுவாகவும் கூறும் முறையால் அவ்வேறுபாடு தெளிவாகும். எடுத்துக்காட்டு ஒன்றினால் இது தெளிவாகும். -