பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காரண கேவலம் - காரண அவத்தை 3 இல் ஒன்று. சர்வ சங்கார காலத்தில் அசுத்த மாயா காரணத்திலே ஒடுங்கி, ஆணவ மலத்தால் மறைப்புண்டு படைப்புக் காலமளவும் ஒன்றும் அறியாமல் கிடப்பது.

காரண சகலம் - காரண அவத்தை 3இல் ஒன்று. ஆன்மாக்கள் உடலெடுத்து இறப்பு பிறப்புக்கு உட்படுதல்.

காரண சரீரம்- தூல உடலுக்குக் காரணமாயுள்ள நுண்ணுடல்.

காரண சுத்தம்- காரண அவத்தை 3 இல் ஒன்று மல நீக்கம். பெற்ற ஆன்மா, பதியின் திரு வடிகளில் ஒன்றுதல்.

காரண பஞ்சாமக்கரம்- பஞ்சாக்கரம் 5இல் 7.

காரணமாதல் பொதுமை - பிறவற்றால் வேறுபடினும், காரணமாதல் மாத்திரையாகிய பொதுமை.

காரண மாயை - தனு கரண புவன போகங்களுக்கு முதல் காரணமாய் உள்ள மாயை.

காரண வாக்கியம் - விண்டு முதலியோரை நிமித்த காரணர் என்று சொல்லும் வசனம்.

காராக்கிருகக்கலி- அஞ்ஞானச் சிறைத் துன்பம்.

காரி நாயனார் - திருக்கடவூர் சோழநாடு. சிவத்தொண்டர். இலிங்க வழிபாடு (63).

காரியம் - காரணத்தால் ஆவது. காரியம் பொருள். எ-டு மண்ணால் செய்யப்படுங்குடம். காரியம் அழிவதால் இதற்கு ஏதுவாகிய குடமும் அழியும்.

காரிய அவத்தை- இவை5:நனவு, கனவு, சுழுத்தி, உறக்கம், பேருறக்கம். பா. காரண அவத்தை.

காரிய ஏது- மூன்று ஏதுக்களில் ஒன்று. புகையாகிய காரியம் நெருப்பாகிய காரணத்தை உணர்த்துவது.

காரிய கேவலம் - உடலைப்பெற்ற ஆன்மா ஐம்புல நுகர்ச்சி நீங்கி, இளைப்பாறும் பொருட்டு, மூலாதாரத்துள் ஒடுங்கும் நிலை.

காரிய சகலம் - உடலைப்பெற்ற ஆன்மா ஒடுக்கத்தின் மூலம் பரவலுமின்றி இறைவன் திருவடியை நினைந்துசெல்லும் நிலை.

காரிய சுத்தம்- உடலைப்பெற்ற ஆன்மா.

காரிய நிகழ்ச்சி - காரணத்தைக் கொண்டு நடைபெறும் செயல் இதற்கு முதல், துணை நிமித்தம் என மூன்று காரணங்கள் தேவை.

காரிய மாயை- மூலப்பிரகிருதி.

காரியரூபப் பிரபஞ்சம் - காரிய வடிவ உலகம்.

காரைக்கால் அம்மையார் - வணிகர், காரைக்கால் சோழ நாடு, சிவபத்தர். இறையருளால் மாங்கனி பெற்றவர். 10 ஆம் திருமுறையில் மூன்று நூல்கள் செய்து அருளியவர். அவையாவன: திருவாலங்காடு மூத்த திருப்பதிகங்கள் (2) திருவிரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி. சங்கம வழிபாடு (63).

காலதத்துவம் - கால தத்துவம் ஆன்மபோகங்களை அளக்கும் காலம் என்னும் சுத்தா சுத்த தத்துவம்.

காலம் - கால தத்துவம் கழியுந்தன்மை உடையது. நாள், கிழமை முதலியவற்றை உண்




92