பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கால்

கிரியை


டாக்குவது நிகழ்காலம் இறந்த காலம் எதிர்காலம் என்னும் மூவகை தத்துவம்6இல் ஒன்று. நிகழ்காலத்தில் பழைய கர்ம வினையின் பயன் நுகரப் படுதல் எதிர்காலத்தில் புதுமை தலைதூக்கும். கடந்தகாலத்தில் கடந்த பட்டறிவுக்கு வழி ஏற்படும்.

கால் - காற்று, புறத்துறுப்பு.

காலன் - கூற்றுவன், எமன்.

காலாள் - அங்கம் 4 இல் ஒன்று

காவலன் - நம்மைக் காக்கும் இறைவன்.

காவிரி - தீர்த்தங்கள் 9 இல் ஒன்று.

காளத்தியார் - காளத்தி நாதர், காளத்தியிலுள்ள சிவன்,

காளாமுகம் - மாவிரதத்தை ஒத்த சைவ உட்பிரிவு.

காளாமுகர் - சைவரில் ஒரு சாரரான காளாமுக வகுப்பினர்.

காளிதம் - களிம்பு, எ-டு நீடு செம்பில் காளிதம்.

காளை - வீரன்.

கான்மியம் - புண்ணியம், பாவம் என்னும் நிலையினவாய்த் தோன்றும் காரிய கன்மம் மூல கன்மத்தினின்றும் தோன்றுவது.

கி

கிடந்த கிழவி - வினையற்றுக் கிடந்த ஆன்மா. அல்லது திருவருள் சிவன் அருளால் குரு ஒளிபெறச் செய்தல்,

கியாதி - அறிவு.

கிரகத்தம் - ஆச்சிரமம் 4 இல் ஒன்று.

கிரகம் - கோள் பா. ஒன்பது கோள்கள்.

கிரக சமித்து - எருக்கு முருக்கு, கருங்காலி, நாயுருவி, அரசு, அத்தி,வன்னி, அறுகுதருப்பை என ஒன்பது.

கிரகதானியம் - கோதுமை, பச்சரிசி,துவரை, பச்சைப்பயறு, கடலை,மொச்சை, எள், உளுந்து, கொள்ளு என ஒன்பது.

கிரணம் - 1. கதிர் 2 ஆகமம் 28இல் ஒன்று.

கிரமம் - நிரல், ஒழுங்கு முறைமை. எ-டு இக்கிரமம். இம் முறை அக்கிரமம் - அம்முறை, எக்கிரமம் - எம்முறை.

கிரியா சத்தி - செயலாற்றல். 5வகைச் சத்தியில் ஒன்று.

கிரியா குரு - செயற்குரு.

கிரியாபாதம் - சிவாகமத்தில் பராபரக் கிரியையின் வகையைக் கூறும் பகுதி.

கிரியா பூசை - கிரியா பாதத்தால் செய்யும் பூசை

கிரியா மார்க்கம் - முத்திக்குரிய கிரியை என்னும் நெறி.

கிரியாவாதி கிரியாவுத்திரி - குண்ட மண்டலாதிகளையும் வேதிகளையும் புறத்தே அமைத்து, ஆகமத்தில் கூறியபடி செய்யும் ஒளத்திரி தீக்கை.

கிரியை - செயல் அல்லது வினை, நோன்பு நாற்படிகளில் ஒன்று. வழிபாட்டின் உறுப்புகளாக அமைந்து பல செயல்களைக் குறிக்கும். அவையாவன: இலிங்க மூர்த்தியைக் கணிகமாகவும் உடையவராகவும் எழுந்தருள்வித்துப் பூசனைப் பொருள் களைத் திரட்டி, ஒரிடத்தில் அமர்ந்து பூதசுத்தி முதலிய 5 சுத்திகளைச் செய்து அகத்தும் புறத்தும் சிவனை வழிபடுதல்.

93