பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சக்தி காலை உரு

சங்கற்ப நிராகரணம்



படும். சத்தியே சிவம், சிவமே சத்தி. சத்தியே விந்து, சத்தியே மனோன்மணி அறிவில்லாத பொருள்கள் சடம் ஆதலால், அவற்றின் ஆற்றலே சடசத்தி எனப்படும். அறிவுடைய பொருள்கள் சித்து எனப்படுவ தால்,அவற்றின்ஆற்றல்சிற்சத்தி எனப்படும். முப்பொருள் களில் பதியும் பசுவும் சித்தாதலால், அவற்றின் ஆற்றல் சிற் சத்தி என்றும், பாசங்கள் சடங்கள் ஆதலால் அவற்றின் ஆற்றல் சடசத்தி என்றும் கூறப்பெறும்.

சக்திகலைஉரு-சத்திதத்துவம்64 கேசரங்களுக்கு உள்ளிருக் கும் பொகுட்டு வடிவமாகும். சாதாக்கியத்திற்கு மேலுள் ளது. (சிபோ பா 61)

சங்க இலக்கியங்கள் - எட்டுத் தொகை, பத்துப்பாட்டு முத லிய நூல்கள். இவற்றில் சிவ னுக்குரிய பண்புகளும் செய்திகளும் கூறப்பட்டுள்ளன.

சங்கதி - இயைபு.

சங்கரி - துடைப்பு, அழிப்பு.

சங்கமம் - 1) இயங்கும் சிவனடியார் திருக்கூட்டம் 2) வீர சைவ சீவன் முத்தர்கள், வீரசைவர் களை வழிநடத்துபவர். வேறு பெயர் சரலிங்கம்.

சங்கம தாபங்கள்- 1) சிவனும் சிவனடியாரும் நிலைத்திருப் பவர் சிவன். எ-டு சங்கமதா பரங்கள் தத்தம் கன்மத்துக்கு ஈடா (சிசிசிப131) 2) சராசர மாகிய உயிர்கள்.

சங்கமத் திருமேனி - இயங்கும் சிவனடியார். பா. திருமேனி, தாபரம்.

சங்கமர் - சிவபத்தர்.

சங்கம வடிவம் - சிவபத்தர் வடிவம்.

சங்கம வழிபாடு வழிபாடு - மூவகை வழிபாடுகளில் ஒன்று. சிவனடியாரை வணங்குதல், சிவனடியார் சிவனுக்குத் தொண்டு செய்பவர். ஆகவே, அவரை வணங்குதல் சிறப்புடையது.

சங்கம வேடம் - சிவ பத்தர் திருவேடம்.

சங்கரர்-எல்லாச்சுருதிவாக்கியங்களுக்கும் அபேதக் கொள்கையின் அடிப்படையில் உரை கண்டு, அக்கொள்கையை நிலை நாட்டியவர். அபேதக் கொள்கையை நிலைநாட்டி யவர். அபேதக் கொள்கையை ஏற்பின், அதைச் சுருதி வாக்கிய மாகக் கொள்வதில்,சங்கரருக்கு உடன்பாடே ஆகமங்கள் பேதக்கொள்கையையோ பேதாபேதக் கொள்கையையோ கொண்டிருக்குமாயின், அவை சுருதியுடன் பொருந்துவன அல்ல என்பது சங்கரர் கருத்து. சங்கரன் - சிவன், சங்கற்பம் - 1) முதலுணர்வு 2) கொள்கை எ-டு சங்கற்ப சதாகதியும் தந்து (சிபி 43).

சங்கற்ப நிராகரணம் - 14 மெய் கண்ட நூல்களுள் ஒன்று. ஆசிரியர் உமாபதி சிவம் மாயா வாதமும் மற்றும் அகச்சமயங்கள் பலவும் கூறுங்கொள்கைகளை எடுத்துக் கூறிச் சித்தாந்த நோக்கில் அவற்றை மறுப்பது. அவ்வாறு மறுக்கப்படும் சம யங்களாவன: 1) மாயா வாதம் 2) ஐக்கிய வாதம் 3) பாடாண வாதம் 4) பேதா வாதம் 5) சிவ சம வாதம் 6) ஈசுர அவிகார வாதம் 7) நிமித்தி காரண பரி

102