பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்கற்பித்தல்

சதசத்து



ணாம வாதம் 8) சைவ வாதம் 9) சங்கிராந்த வாதம்.

சங்கற்பித்தல்-எண்ணுதல்

சங்காரம் -அழித்தல், ஒடுக்கல்.

சங்காரக் காரணன் - அழித்தலுக்குக் காரணமான சிவன்.

சங்கியை - எண்ணிக்கை

சங்கிரமித்தல் - கலத்தல்,

சங்கிராந்த சமவாதம்-பாசுபதம்

சங்கிராந்தவாதம்- மலம் நீங்கிய ஆன்மாவின்கண் திருவருள் மேவி, அதனை அருள் வடிவம் ஆக்கும் என்னும் கொள்கை

சங்கு - இடம்புரி, வலம் புரி, சலஞ்சலம், பாஞ்ச சன்னியம் என நான்கு.

சங்கேதம்-சொல்லுக்கும்பொருளுக்கும் உள்ளதாகிய நியம ஆற்றல்.

சங்கை - 1) கருத்து எ-டு கால சங்கையினைப் பண்ணி (சிசி சுப 144) 2) ஐயம்.

சச்சிதானந்தமயன் - சத்தாயும் சித்தாயும் உள்ளது ஆனந்த மயமாக இருக்கும். ஆகவே, இறை வனைச் சச்சிதானந்தமயன் என்று நூல்கள் கூறும்.

சச்சிதானந்தம் - ஆனந்தம் என்னும் இறைவனுக்குரிய குணம். உண்மையறிவு.

சஞ்சிதம்-ஒருவகைக்கன்மத்துள் ஒன்று. மாயையில் கட்டுப்பட்டிருப்பது இறைவன் குருவாகி வந்து ஞானத்தை உணர்த்தும் பொழுதே, அவன் அருளால் நீங்குவது. தமிழில் பழவினை, கிடைவினை, முன்வினை என்று கூறப்பெறும், உடம்பு உள்ளவரை இருப்பது சஞ்சித கன்மம் என்றும் கூறப்பெறும். தூல கன்மம் தூலநிலை நீங்கிச்கசூக்குமமாய் நிலைத்திருக்கும் பொழுது, சஞ்சிதம் எனப்படும். சஞ்சிதம்- நன்கு பெறப் பட்டது.

சடங்கு - வைதிகச் செயல்.

சடசத்தி- பாசம் சமம்.ஆதலால், அதன் சத்தி சடசத்தி

சடத்துவம் - பருப்பொருள் தன்மை

சடப்பொருள் - பருப்பொருள்.

சடம் - பருமை, அறிவற்றது.

சட்ட-செம்மையாகஇச்சொல்லே சட்டம் என மருவிற்று. எ-டு 1) சட்ட இனியுளது சத்தே காண் (சிபோபா.57) 2) தாங்களே சட்ட உறங்குவார்கள் (திப 13)

சடிதி - விரைவாக

சடைய நாயனார் - ஆதிசைவர். திருநாவலூர் - நடுநாடு. சுந்தரர் தந்தை. இலிங்க வழிபாடு (63).

சண்டேசுர நாயனார் - மறையவர். திருச்சேய்ஞலூர் சோழநாடு. பசு மேய்த்துப் பசும்பால் கறந்து மணலான இலிங்கத் திற்குத்திருமஞ்சனம் செய்தவர். இலிங்க வழிபாடு (63),

சண்மதம்-1) சைவம், வைணவம், சாக்தம், காணபத்தியம், கெளமாரம், செளரம் என ஆறு. 2) கபில மதம், கணாத மதம், பதஞ்சலி மதம், அட்சபாத மதம், வியாச மதம், சைமினி மதம் என்னும் ஆறுதரிசனங்கள்.

சதசத்து - ஆன்மா என்பது பசுசத்தும் (உள்பொருள்), அசத்துமாய் (இல் பொருள்) இருப்பது. இதனால் அதுசார்ந்ததன் வண்ணம் உடையதாதல். பசு சத்தைச் சார்ந்த வழி சத்தாயும் அசத்தைச் சார்ந்தவழி அசத் தாயும் நிற்றல் பசு சத சத்து.

103