பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமய விளைவுகள்

சயம்


சமயவிளைவுகள்-:சமயம் உண்டாக்குபவை.

அவையாவன:1) தன்னையறிதல் 2) தலைவனையறிதல் 3) தடையை அறுத்தல் 4) நன்மை தலைப்படல் 5) பொது நோக்கு என ஐந்து.

சமயி - சமய தீக்கை பெற்றவர்.
சமவாதிபிரவர்த்தி-செயல்முறையில் சரிபார்த்தல்.
சமவாயம், சமவேதம் - நீக்கமின்றி நிற்றல், சைவ சித்தாந்தத்தில் இது

தாதான்மியம் சம்பந்தமாகும். இது இருவகை 1) குணத்திற்கும் குணிக்கும் உண்டாகும் ஒற்றுமைத்தொடர்பு 2) இருபொருள் ஒற்றுமைத் தொடர்பு. இவ்விரண்டில் முன்னது தாதான்மியம் என்றும் பின்னது அத்துவிதம் என்றும் கூறப்பெறும். சிவம் குணி, சத்தி குணம். சீவமும் சிவமும் கலந்திருக்கும் தாதான்மாயம் அத்துவிதம் எனப்படும். சமவேதம் சமவாயம் என்றே பொருள்படும்.

சமவியாபகம் - ஒத்த பரவுகை.
சமனம் - திரோபவம்.
சமனன்-1) பத்து வளிகளில் ஒன்று 2) பெத்த நிலையில் ஆன்மா

அடையக்கூடிய உத்தம பதவி. சிவசத்தி.

சமாதி- 1)முத்திநிலை எண் சித்திகளில் ஒன்று. உள்ளத்தைப்

பரம்பொருளோடு ஒன்றுபடுத்தி நிறுத்தி, உயிர்பெறும் இறுதிநிலை. எ-டு சார்பு கெடாவொழுகின் நல்ல சமாதியுமாம் கேதப்பட வருவது.
2)கல்லறை-திருமுருக கிருபானந்தவாரியார் கல்லறையில் வைக்கப்பட்டார்.

சம்சமயம் - ஐயப்பாடு
சமையா - அமைதியிலா. எ-டு சமையாப் பொறுமை
சம்பந்தம்- பொருள் : கன்மத்தில் தொடர்பட்டு நிற்பதால், மாயை சம்பந்தம்

எனப்படும். வகை: 1)அத்துவிதம் - இருமையில் ஒருமை 2)தாதான்மியம். ஒருமையில் இருமை.
தற்கிழமையே தமிழில் தாதான்மியம், சமவேதம், சமவாயம் எனப்படும். இருமையில் ஒருமை என்பது இறைவனுக்கும் உலகத்துக்குமுள்ள தொடர்பு. ஒருமையில் இருமை என்பது இறைவனுக்கும் சத்திக்கும் :இடையே உள்ள தொடர்பு.

சம்பந்தப் படுத்தல் - தொடர்புண்டாக்கல்.
சம்பந்த விசேடம் - ஒருவகைத் தொடர்பு.
சம்பந்தர்-பா. திருஞானசம்பந்தர்.
சம்பவம் - உண்மை, நிகழ்ச்சி. அளவை 8 இல் ஒன்று, ஒ.அசம்பாவிதம்.
சம்பை - எழுவகைத் தானியங்களில் ஒன்று.
சமுவரம் - பொறி வழிச்செல்லாது தடுத்து முத்திக்குக் காரணமாவது.
சமூகம் - கூட்டம்.
சமூகான்ம வாதம் - சவுத்திராந்திகம்.

உடல், பொறி, சூக்கும உடல்,உயிர்வளி ஆகியவற்றுள் ஒன்று குறைந்தாலும் அறிவு நிகழாது. அவை எல்லாம் கூடிய சமுதாயமே உயிர் என்னுங்கொள்கை. இக்கொள்கை உடையவர் சமூகான்மவாதி எனப்படுவர். இவர்கள் பெளத்தருள் ஒரு சாரர்.

சயம் - வெற்றி.

107