பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாக்கிரம்

'

சாக்கிராதி


சிவபெருமான்மீது அன்பு பூண்டு கல்லால் எறிந்து வழி பட்டு, உணவு உண்ணும் நியமம் பூண்டவர். இலிங்க வழிபாடு (63).

சாக்கிரம் - நனவு, ஆன்மாவின் விழிப்பு நிலை. அவத்தை ஐந்தில் ஒன்று. அதில் முதல் நிலை. ஆன்மா புருவ நடுவில் நிற்கும். கலாதி சேர்ந்த சகலம். எ-டு இலாடத்தே சாக்கிரத்தை எய்திய உள்ளம் (சிபோபா 29).

சாக்கிரக்கருவி - நனவுக்கருவி. சாக்கிர அவத்தைக்குரிய கருவி. அவையாவன: ஐம்பொறி 5, ஐம்புலன் 5, அகக்கருவி 4, வளி 10, ஆன்மா 1 ஆக 25.

சாக்கிரத்தில் அதீதம் - நனவில் உயிர்ப் படங்கல், சாக்கிராதீதம் பொருள்களை ஆன்மா நுகர்கின்ற வேளையில், உயிர் வளி இயங்காது. ஒன்றை அறியாமல் ஆன்மா மயங்கி நிற்கும். ஐந்தவத்தையில் இறுதி நிலை அதாவதுதற்பரம்ஆகும்நிலை.

சாக்கிரத்தில் சாக்கிரம் -நனவில் நனவு, தத்துவ தாத்துவிகங்களோடு கூடிப் பொருள்களை ஆன்மா நுகரும் நிலை. ஐந்து அவத்தையில் முதல் நிலை.

சாக்கிரத்தில் சுழுத்தி - நனவில் சுழுத்தி. ஐந்தவத்தையில் இது இரண்டாம் நிலை, ஆன்மா சித்தத்துடனும் உயிர்வளியுடனும் கூடி அறிவுணர்ச்சி முதலியன அடங்கி நிற்கும் நிலை.

சாக்கிரத்தில் செயல் ஒழியுங்கருவிகள் - தன்மாத்திரை 5, பூதம் 5, தாத்துவிகம் 40 ஆக 40+10=50 தாத்துவிகத்தில் அகத் தத்துவம் 10 அடங்கும்.

சாக்கிரத்தில் சொப்பனம் - நனவில் கனவு, சித்தத்துடனும் உயிர் வளியுடனும் ஆன்மா கூடி, அறிவுணர்ச்சி முதலியன தெளிவின்றி நிற்கும் நிலை. ஐந்தவத்தையில் இது மூன்றாம் நிலை.

சாக்கிரத்தில் துரியம் - நனவில் பேரூறக்கம். ஐந்தவத்தையில் இது நான்காம் நிலை ஆன்மா சித்தம் இழக்கும். சிறிதே இயங்கும்.

சாக்கிரத்தில் துரியாதீதம் - நனவில் உயிர்ப்படங்கல், நாபி யில் ஆன்மா நின்ற பின்னர். அங்கு நின்று கீழ் இறங்கி மூலாதாரத்தை அடையும். இப்பொழுது முன்பு இயங்கிக் கொண்டிருக்கும் உயிர்வளி இயங்காது. இது இறுதி நிலையாகிய அதீதநிலை

சாக்கிர வகை - 1) சாக்கிர சாக் கிரம் 2) சாக்கிராதி 3) சகல சாக்கிரம் 4) கேவல சாக்கிரம் 5) சுத்த சாக்கிரம்.

சாக்கிராதி - நனவாதி சாக்கிரம் முதலிய 5. இது மூன்றுவகை

1) கீழாலவத்தை : கீழ் நோக்கு அவத்தை. கீழ்நோக்கிய சாக்கிரம் ஆன்மா புருவ நடுவிலிருந்து மூலாதாரம் வரை செல்வது உற்பவம் காட்டும் சொப்பனம் முதலிய அவத்தைக்குரியது. 35கருவிகள் தொழிற்படும்.

2) மத்திய அவத்தை மையநோக்கு அவத்தை மையநோக்கு சாக்கிரம்.

எல்லாக்கருவிகளும் செயற்படும். புறத்து விடயங்களை நுகர்வதற்குரியதாய் இலாடத்தில் நிகழ்வது. இதிலும் ஐந்து அவத்தை உண்டு.

110