பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:Lh



3) மேலாலவத்தை மேல்நோக்கு அவத்தை மேல் நோக்கு சாக்கிரம். மூலாதாரத்திலிருந்து ஆன்மா.புருவ நடுவிற்குச் செல்லுதல், தீய பிறப்பு அறும் பொழுது உண்டாகும் சமாதி நிலை. -

சாங்கியம்- சாங்கிய மதம். தத்துவங்களைச் சங்கியையில் (எண்ணிக்கையில்) கூறுவதால் இப்பெயர். கடவுளை மறுப்பதால், நிரீச்சுர சாங்கியம் என்னும் பெயரும் உண்டு. ஈசுவரன் இல்லை என்பது நிரீச் சுரவாதம்,பொறிகள் வழியாகப் புலன்களால் விளைவதே புத்தி அல்லது அறிவு. ஆன்மா செலுத்துவதை ஐம்பொறிகள் தம் புலன்களால் அறியும் என்பது பொருந்தாது என்று இது கூறும் அளவை அறிவால் அறியப்படும் உலகு சத்தே என்றும் இம்மதம் கூறும். கபிலரால் வெளிப்படுத்தப்பட்டது சாங்கியம். இது தத்துவங்கள் 25 என்றும் வரையறுக்கும்.

சாங்கிய நூல் - சாங்கிய சமயநூல்.

சாங்கிய யோகம் - பிரமமே சிவன், சிவனே பிரமம் என்னும் கொள்கையுள்ள சமயம்,

சாங்கியர் - சாங்கிய சமயத்தினர்.

சாட்சி-சைதன்யம், நுண்ணறிவு,

தூய ஆவி.

சாட்சு தீக்கை - நயன தீக்கை சாட்டாங்க நமக்காரம் - வணக்கத்தில் ஒருவகை. இருகை, இரு முழங்கால், இருதோள், மார்பு, நெற்றி ஆகிய எட்டுறுப்புகள் நிலத்தில் தோயச் செய்யும் வணக்கம்.

சாணம் - சாணி. பசுஞ்சாணத் தைச் சுட்டுத் திருநீறு செய்வது வழக்கம்.

சாண முத்திரை - முத்திரையில் ஒரு வகை. பா. முத்திரை

சாணை - சந்தனக்கல். மூர்த்தி நாயனார் திரு ஆலவாய் இறைவனுக்குச் சாத்தச் சந்தனம் அரைத்து அளித்தவர் (திப50)

சாதகம் - நன்மை.ஒ. பாதகம்.

சாதனம் - கருவி.

சாதனமும் பயனும் - சிவஞான போதம் முதல் நூல். பிரமாணம், இலக்கணம் என்னும் இரு பகுதிகளில் ஒவ்வொன்றிலும் 3 நூற்பாக்களில் ஆக 6 இல் முப்பொருள்களின் பொது இயல்பு உணர்த்தப்படுகின்றது. சாதனம், பயன் என்னும் இரு பகுதிகளில் ஒவ்வொன்றிலும் 3 நூற்பாக்களில் ஆக 6-இல் முப்பொருள்களின் சிறப்பியல்பு கூறப்படுகின்றது. குறிப்பாக, 8-12 நூற்பாக்களின் உட்பொருள் அற இயல், சமய இயல்பற்றியதாகும்.

சாதனன் - பிறந்தோன்.

சாத்தர் - சாத்திப் பூசை செய்பவர்.

சாத்தி - சாத்திரத்திக்கை தீக்கை 7 இல் ஒன்று. சிவாகமத்தத் துவங்களை ஆசிரியர் மாணவனுக்கு அறிவுறுத்தும் முறை.

சாத்திரம் - அருளறிவு நூல். சமயத்தின் ஒருகண், எ-டு சிவஞானபோதம்.சாத்திரத்தை ஒதச் சற்குருவின் அருள் கிடைக்கும். வகை : 1) வைதிகம் - சிவஞான போதம் 2) அவைதிகம் உலகா யதம்.