பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிவ தரிசனம்

சிவ புராணம்


 சிவ தரிசனம் - சிவகாட்சி சிவனருள் விளங்கல். செயல் 10இல் ஒன்று.

சிவதருமம் -சிவ புண்ணியம்.

சிவதருமிணி-முந்தி காமிகட்குச் சத்தி வடிவமாகிய சிகாச்சேதத்தோடு செய்யும் சபீக தீக்கை ஒ. உலோக தருமிணி.

சிவதலங்கள் - பொதுவாக உள்ளவை 274. இவற்றில் 265 தமிழ்நாட்டிலும் 1 சேர நாட்டிலும்(கேரளா) 6 வட நாட்டிலும் 2ஈழ நாட்டிலும் உள்ளவை.தமிழ்நாட்டில் உள்ளவை; சோழ நாடு 190. நடு நாடு 22. பாண்டிய நாடு 14 தொண்டை நாடு 32 கொங்கு நாடு 7ஆ 265.

சிவதீக்கை-சிவபூசையினையும் சமய ஆசார்ங்களையும் மேற் கொள்ளும் முன்பு, சைவர் ஆகுபவருக்குக்குருவினால் செய்யப்படும் சமயச் சடங்கு.

சிவ தூய சரீரம் - சிவனின் புற உரு 5 ஆற்றல்கள் கொண்டது; ஈசாதி, பூரணி, ஆர்த்தி, வாமை, மூர்த்தி

சிவ நுகர்வு- சிவக் கலப்பில் கூறியவாறு, சிவத்தோடு கலந்த அருளாளர்கள் வினைவயத் தால் பாதகங்கள், கொலை, களவு, கள் ளுண்ணல், தீ நெறி பற்றி வாழ்தல், குலமுறை தப்பி வாழ்தல், பிறரால் தவறு தலைப் பெய்யப் படுதல் முதலிய நிலைமைகளைப் பெற்றாலும், அவர்கள் தம் வயத்தராக அன்றி இறைவயத்த ராகித் தம் செயலற்று நிற்பதால், இறைவனும் அவர்களோடு கலந்து அவர்கள் உண்டல், உறங்கல்,நடத்தல் முதலிய பலவகைச் செயல் களைச் செய்யினும், அவற்றைத் தம் செயலாக ஏற்றுத் தன்வயமாக்கி விடுவன். இந்நிலையில் உயிர் பெறும் இன்பமே சிவ நுகர்வாகும்.

சிவ நிலை - இதயத் தாமரையாகிய இருக்கையின் மேல் 36 தத்துவத்தையும் கடந்த சிவ சக்தி நிலை கொண்டிருப்பது.

சிவநெறிப் பிரகாசம்- ஓர் அருளறிவு நூல் ஆசிரியர் சிவாக்கிர யோகிகள். அளவை பற்றிக் கூறுவது. உயிர்கள் பல என்பதற்கு வழக்குரை களும் கூறப்படுகின்றன. சித்தியார், தத்துவ பிரகாசம்ஆகியவற்றிற்குப்பின் தோன்றியது.

சிவபதம், பதவி- சிவபத்தர்கள் பக்குவத்திற்குரிய நால்வகைச் சிவ பதவி. 1) தான் ஆளும் உலகத்திலிருத்தல் 2) தன்பால் இருத்தல் 3) தானேபதம் பெறல் 4) தான் ஆகுதல்.

சிவபதி - சிவன்.

சிவப்பிரகாசம் - சிவனுக்குப் படைக்கப்பட்ட திருவமுது.

சிவப்பிராமணர் - ஆதிசைவர். கோயில் குருக்கள்.

சிவபுண்ணியம்- பதி புண்ணியம். சிவனே முழுமுதற் கடவுள் எனக்கொண்டு அக் கடவு ளுக்குச் செய்யும் நல்வினை.

சிவ புராணம் -1) சைவ புராணம் 2) கந்த புராணம் 3) இலிங்க புராணம் 4) கூர்ம புராணம் 5) வாமன புராணம் 6) வராக புராணம்7) பெளடியபுராணம் 8) மச்ச புராணம் 9) மார்க்கண் டேய புராணம் 10) பிரமாண்ட புராணம்.

120