பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசீவன்

அஞ்செழுத்தின் பெருமை

அசீவன் - உயிரற்றது புத்தகலம், தாரகன் தர்மம், அதர்மம், காலம், ஆகாயம் என்னும் 5 பொருட்கள் கொண்டது.

அசுசி- சுத்தமின்மை .

அசுத்தம் - சுத்தமின்மை , அழுக் குடைமை. எ-டு வைத்த மாயம் உறு சித்து அசுத்தம். உற (சிசிபப 250)

அசுத்த தத்துவம் - தூய்மை நீங்கிய மெய்ந்நெறி, மாயை காலம் நியதி, கலை, வித்தை , அராகம், புருடன் என்னும் ஏழு. ஒ. சுத்த தத்துவம்.

அசுத்த மாயை- மாயை இரண்டில் ஒன்று, மற்றொன்று சுத்தமாயை, மும்மலத்துள் ஒன்று. இதிலிருந்து அசுத்த கால முதல் அசுத்த நிலம் முடிபாக 31 தத்துவங்களும் தோன்றும்.

அசுர், அசுரர்- இராக்கதர் அரக்கர். ஒ. சுரர்.

அசுவத்தாமன்- 7 சிரஞ்சீவியரில் ஒருவர்

அசுவினிதேவர் -தத்திரன்,நாதத்தியன் என இருவர்.

அசேதனம் - பருப்பொருள் உலகம். பா. உலகம் ஓ.சேதனப் பிரபஞ்சம்.

அசோகு - அசோக மரம், ஒ.போதி

அஞ்சின் அடைவு - சிவன்,அருள், ஆவி, திரோதம், மலம் ஆகிய ஐந்தும் அவன் எழுத்து அஞ்சின் அடைவாகும் (உவி 42),

அஞ்சி அன்று அரிதான் ஓட- சூரபதுமனுக்கு அஞ்சித் திருமால் திருப்பாற்கடலை நீங்கி ஓடி அயனிடம் முறையிட, அயனும் முருகனை உண்டாக்கி, அவ்வசுரனை அழித்தார்.தாரகன் என்பவன் ஓர் அசுரன்.அவனுக்குத் திருமால் முதலிய தேவர் எல்லாம் அஞ்சி ஓடி அயனிடம் முறையிட்டனர்.அப்போது காளியின் மூலம் அவனை அயன் அழைத்தார்.திரிபோரத்து அசுரருக்கு அஞ்சித் திருமால் முதலிய தேவர்கள் அயனிடம் முறையிடத் திரிபுரத்தை அவர் எரித்தார். சலந்திரன் என்பவனும் ஓர் அசுரன்.அவன் திருமாலைத் திருபாற்கடலில் பள்ளி கொள்ளவொட்டாமல் தடுத்தான்.திருமால் அவனுக்கு அஞ்சி முறையிட,அயன் அவன் உடலைப் பிளந்து அரியைக் காப்பாற்றினார்.(சிசிபப292).

அஞ்சு-ஐந்து

அஞ்சு அவத்தை-ஐந்து அவத்தை உடலினுள் ஆன்மா அல்லது உயிர் நுகரும் ஐந்து நிலையுள்ள பாடுசாக்கிரம் ,சொப்பனம்,சுழுத்தி,துரியம்,துரியாகீதம் என ஐந்து வகையான காரிய அவத்தை.

அஞ்சு அவத்தைக் காரணிகள்-புலன் 10 வளி 10

அஞ்சுமான்-28 ஆகமங்களுள் ஒன்று

அஞ்செழுத்து-திரு ஐந்தெழுத்து.எ.டு சிவாய நம, நமச்சிவாய சைவ சித்தாத்தின் கரு.சி-சிவம் வ-அருள் ய-உயிர் ந-மறைப்பாற்றல் ம-மலம்

அஞ்செழுத்தின் பெருமை-அஞ்சு(5)எழுத்தே ஆகமம்(28) அதுவே அண்ணல் திருமறை (4).அதுவே ஆதிபுராணம் அதுவே ஆனந்த தாண்டவம்.ஆறாறுக்கு அப்பால் அதுவே மோனந்த மாமுத்தி(உவி45)

5