பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிவனடியைச் சேரும் முத்தி

சிவோசம்பாவனை


சிவனடியைச் சேரும் முத்தி - மும்மலங்களும் நீங்கப் பெற்றுச் சிவனடி சேர்வதைச் சித்தாந்திகள் முத்தி என்பர்.

சிவன் - சிவம்.

சிவன் ஐமுகம் - ஈசானம், தற்புருடம், அகோரம், வாமம், சத்தி யோசாதம் என்னும் 5 முகங்கள்.

சிவன் எண்குணம் - பா. எண் குணம்.

சிவன் கண்ணா - இறைவன் ஆன்மாக்களின் அறிவுக்கு அறிவாய் நின்று அறிவித்தல், ஆகவே, இறைவன் முற்றுணர்வினன்.

சிவன்தாள் - சிவன் அருள்.

சிவன் மூன்று - மன்னு சிவன்; பேரின்பக் காரணன், சொன்ன சிவன் முற்றுணர்வினன். எண்ணான் சிவன் துய தன்மையன்.

சிவர்கமம் - சைவாகமம். சிவனைச் சிறப்பித்துக் கூறும் அருள் நூல். இது 28 வகை. இதன் வழிப்பட்டது சைவ சமயம். பா. ஆகமம் 28

சிவாகமக் கொள்கை - சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்றும் குருவால் தீக்கை செய்யப் பெற்று, அவர் காட்டிய வழியில்செல்வம் சிறப்பு என்பது.

சிவாக்கிரயோகியர் - வேத விற்பன்னர் இவர் சிவஞானபோத பாடியம், சித்தாந்ததீவிகை தத்துவ தரிசனம், பாஞ்சராத் திரசபடிகை என்னும் நூல்களைச் செய்தவர். இவர் தஞ்சாவூர் சரபோசி மன்னரின் அவையில் 17 நாள் தங்கி மணவாள மாமுனி என்னும் வைணவ சிரேட்டருடன் வாதிட்டுச் சிவபரத்துவம் நிலைநாட்டியவர். மெய்ப்பிக்கப்படாத சான்றால் இவர் சிவஞான போதம் வடமொழியிலிருந்து வந்தது என்று கூறியவர்.

சிவாசாரியார் - பட்டப்பெயர் ஆதிசைவர்.

சிவாத்துவித சைவம் - இதனைத் தோற்றுவித்தவர் நீலகண்ட சிவாசாரியார். இவர் பிரம சூத்திரத்திற்குச் செய்த பாடியத்தில் கூறப்பட்ட கொள்கையே சிவாத்துவித சைவம். சிவமே உலக முதற் காரணம் என்னுங்கொள்கை. இக்கொள் கையினர் சிவாத்துவித சைவர்.

சிவாபதி - சிவன்.

சிவாய நம- இவற்றின் நுண் பொருளாவது நமசிவாய. அஞ்செழுத்து. சிவம் வ.அருள். ய. உயிர் ந. மறைப்பாற்றல். ம.ஆணவம்.

சிவார்ச்சனை - சிவபூசை.

சிவார்ப்பணம் - சிவனிடத்து ஒப்பித்தல்.

சிவாலயம் - சிவன் கோவில்.

சிவானுபவம் - சிவ அறிவு, சிவ அனுபவம்.

சிவானுபூதி- சிவனோடு இரண்டறக் கலத்தல்.

சிவிகை - பல்லக்கு சம்பந்தர் ஏறிச் செல்ல சிவனிடமிருந்து இதனைத் திரு அரத் துறையில் பெறுதல். பா. திருஞான சம்பந்தர் செய்த அற்புதங்கள்.

சிவோசம்பாவனை- சிகவாகம் (சிவன்) என்று நினைத்தல். இதனைக் கருட தியானத்திற்கு ஒப்பிடுவது மரபு. கருட பாவனையில் மாந்திரிகன் தன்னைக் கருட பாம்பினுக்கு அதி தெய்வமாகப் பாவித்தலால்,

122