பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறந்து விளங்குவன

சிறுத்தொண்ட நாயனார்


பாம்பின் நஞ்சைக் கடியுண்டவனிடமிருந்து நீக்க இயலுகிறது. அதுபோலச் சிவமாகத் தன்னைப் பாவிக்கும் உயிர், தளையினின்று விடுபட இயலும் நஞ்சு நீங்குவதற்காகக் கருட பாவனை செய்யப்பட்டு அது நீங்கியவுடன் மாந்திரிகன் தன் நிலைக்கு மீள்கிறான். அது போல, உயிர் பாசத்தினின்றும் நீங்குவதற்காகச் சிவோகம்பாவனை செய்யப்படுகிறது. இதனால் உயிர் பாசத்தினின்றும் நீங்கியவுடன் களிம்பு நீக்கப் பெற்ற செம்பைப்போலாகும். இப்பாவனை பாச நீக்கத்திற்குரிய பயிற்சியாகும். ஒ. கருட தியானம்.

சிறந்து விளங்குவன- தத்துவங்கள் நோக்கிய சமயங்கள் உண்டாயின. ஆகவே சமயம், ஆசாரியர், சாத்திரம் ஆகியவை சைவ சமயத்தில் சிறந்து விளங்குவன.

சிறப்படையாளம் - சிறப்புச் சின்னம், குறி

சிறப்பு - 1) அன்பு 2) முத்தி; சிவயசிவ.

சிறந்தோர் பெயர்- அண்ணல், குரிசில், ஏந்தல், தோன்றல், செம்மல்.

சிறப்புத் திருநாமம் - சிறப்புப் பெயர்.

சிறப்பிலார் - அன்பிலார்.

சிறப்புலிநாயனார்- மறையவர், ஆக்கூர் சோழ நாடு. வெண்ணீறு அணிந்து வேதம் ஒதி யாகம் செய்து சிவனடியார்க்கு உணவு அளித்தவர். இலிங்க வழிபாடு (63)

சிறப்புப் பாயிரம் - சிறப்பு முகவுரை. நூல் உறுப்புகளில் ஒன்று. இங்குச் சிவஞான போதச் சிறப்புப்பாயிரத்தைக் குறிப்பது. இதனை வழங்கியவர் பெயர் தெரியவில்லை.

சிறப்புப் பாயிரப் பொருட்கள் - பா. பாயிரப் பொருட்கள்.

சிறப்புவிதி- ஊழைவிடமுயற்சியே வலிது. இது ஒரு சிலருக்கே பொருந்தும். ஒ. பொது விதி.

சிற்சத்தி - அறிவாற்றல். இது அளவையாகு அறுவர். உரையில் மறைஞான தேசிகர் ஒரே ஓரிடத்தில் சிற்சத்தியைக் குறிப்பிடுகிறார். சிவஞான முனிவர் உரையில் இச் சொல்லாட்சி அருகிக் காணப்படுகிறது. இருப்பினும், சிற்சத்தி பற்றி வலியுறுத்தப்படுகிறது. சிவ ஞானபோதத்தில் இச் சொல் இடம்பெறவில்லை. பதி பசு ஆகிய இரண்டும் சித்தாதலால், அவற்றின் சத்தி சிற்சத்தியாகும்.

சிறியான்- சிறுமை உடையவன்.

சிற்பரம் - அறிவுக்கு எட்டாத கடவுள்.

சிற்பரச்செல்வர் - இறைவன் அடியவர்.

சிற்றம்பலநாடிகள்- மெய்கண்டார் மாணவர்களில் ஒருவர். துகளறுபோத ஆசிரியர்.

சிற்றறிவு - வரையறைக்கு உட்பட்ட அறிவு. உலக அறிவு. மெய்யறிவுக்குக் கீழ்ப் பட்ட அறிவு. ஒ. பேரறிவு.

சிற்றின்பம் - ஐம்புல இன்பம், காமம். ஒ. பேரின்பம்.

சிறுத்தொண்ட நாயனார் - மகாமாத்திரர். திருச்செங் காட்ட்ங்குடி - சோழநாடு தன் ஒரே மகனை வாளால் அரிந்து சமைத்துச் சிவனடியார்க்குக் கறியமுது இட்டவர். சங்கம் வழிபாடு (63).

123