பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுப்பிரபேதம்

சூக்கும பஞ்சாக்கரம்


சுப்பிரபேதம் - சதாசிவமூர்த்தியின் வாமதேவ முகத்தினின்று உற்பவித்த 5 ஆகமங்களுள் ஒன்று.

சுமார்த்தம்- மிருதி நூல்களில் கூறிய விதிகள்.

சுயம்பு - தானே தோன்றியது. எ-டு சுயம்புலிங்கம்

சுயம்புமூர்த்தி- தானே தோன்றிய திருமேனி உடையான்.

சுரா - தேவர். ஒ. அசுரர்.

சுராபானம் - வேதத்தில் கூறப்படுங்கள்

சுருக்கு- வேள்வி நெய்த்துடுப்பு

சுருதி - வேறு ஒன்றினை அவா வாது, தான் கருதிய பொருளைத் தானே தெரிவிப்பது.

சுருவம் - அகப்பை மூடி

சுருதிகள் - வேதங்கள்.

சுவத்தி - ஸ்வத்திகக்குறி எ.டு கோகணதம் சுவத்தி.

சுவர்க்கம், சொர்க்கம்- மெய்யர் வாழும் இடம். வானுலகம் ஒ. நரகம்,

சுவர்க்க முத்தி- முத்தியில் ஒரு வகை, மீமாஞ்சகர் மறு உலகில் இன்பம் நுகர்தலை முத்தி என்பர். பா. முத்தி,

சுவதப்பிரமாணம் - தன்னால் உணரப்பாலது. பா. அறிவின் ஏற்புடைமை.

சுவயம்பு - தானாகத் தோன்றுவது.

சுவாபலிங்கம் - இயல்புக்குறி. எ-டு பேதமா விருட்சம்

சுவார்த்தம் - தன் பொருட்டு.

சுவேச்சை - தானாகவே எ-டு சோதியாய் நின்ற மாயன் சுவேச்சையால் உருவு கொண்டு

சுவேதசங்கள் - சவேதசம் வியர்வை. வியர்வையில் தோன்றும் புழு, விட்டில் முதலிய உயிர்கள் நால்வகைத் தோற்றத்திலும் எழுவகைப்பிறப்பிலும் ஒன்று.

சுவேதனம்- திருவெண்காடு.

சுவேதனாப் பிரத்தியட்சம் - தண் வேதனைக் காட்சி

சுவேதனன்- சுவேதனப் பெருமான். சிவஞானபோத ஆசிரியர் மெய்கண்டாரின் இயற்பெயர்.

சுவை ஆறு - கைப்பு, தித்திப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு.

சுழுத்தி - உறக்கம். ஐந்தவத்தையில் மூன்றாம் நிலை.

சூ

சூக்கும ஐந்தொழில்- அனுக் கிரகம், திரோபவம், சங்காரம், திதி, படைப்பு.

சூக்குமம் - நுண்மை, அருவம்.

சூக்கும தேகம்- நுண்ணுடல், அருவ உடல் வேறு பெயர் புரியட்டக தேகம். சத்தம், பரிசம, ருபம், ரசம், கந்தம் என்னும் தன் மாத்திரைகள் ஐந்தும் மணம், புத்தி அகங்காரம் என்னும் அகக்கருவிகள் மூன்றும் ஆகிய எட்டும் சேர்ந்து உண்டாகும் உடல் (5+3=8)

சூக்கும தேகான்ம வாதம்- குக்கும தேகமே ஆன்மா என்னுங் கொள்கை. இக் கொள்கையினர் சூக்கும தேகான்மவாதி உலகாயதரில் ஒரு சாரர் (மாத்துமிகர்).

சூக்கும பஞ்சாக்கரம்-அகாரம், உகாரம், மகாரம், விந்து, நாதம் என ஐந்து பிரணவத்தின் கூறு களாய் நிற்பதால் அகாரம்

129