பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சூனிய வாதம்

செவி அறிவுறுத்தல்


சூனிய வாதம்- சூனியம் என்னும் பொருள் தோன்றும் என்னுங் கொள்கை நாத்திக வாதம். இச் கொள்கையினர் சூனியவாதி.

செ

செக்கர் - சிவப்பு, எ-டு செக்கர் வானம்.

செடியேன் - முடலை உடல் கொண்ட பாவி

செத்தார் - நுகாவு நீங்கியவர்.

செந்தழல் - செந்தி

செந்தழலின் மூழ்கி சிரித்த பிரான் - தம்மை மதியாத தேவர் முதலியோரின் கோட்டை யைத் தன் சிவந்த அனலால் அழித்துச் சிறுநகை செய்த சிவன்.

செந்நெறி -- செம்மையான நெறி. சிவநெறி,

செபம் - பிரார்த்தனை.

செப்பல் - பா. சுத்த மாயை.

செப்பு - கூறு.

செம்மலர் - செந்தாமரை. முதல் வன் திருவடி தாமரைபோல் குவிதலும் விரிதலும் இல்லாதது இத்தன்மையே. செம்மை. அது பற்றியே செம்மலர் என்பது,

செம்மை - நேர்மை.

செம்மைத்து - நேர்மை உடைத்து.

செம்பிறப்பு - 6 பிறப்பு வசையில் ஒன்று.

செம்பொருள் - வெளிப்படைப் பொருள்.

செம்போக்கு - உயர்பிறவிகளில் உயிர் செல்லுதல்.

செம்போதகர் - இருபான்மை யரில் ஒருவர், மற்றொருவர் மண்டலர்.

செயல் - வினை. பா, செய்தி.

செயற்கரிய செயல் - திருநீல கண்ட நாயனார், சிறுத்தொண்ட நாயனார் முதலியோர் செயற் கரிய செயல்களைச் செய்து பெறுதற்கரிய பயனைப் பெற்றனர்.

செயற்கை உணர்வு - கருவியால் அறியும் அறிவு.

செய் - 1) செயல் 2) வயல்

செய்யில் உகுத்த திருப்படி மாற்று - வயலில் உதிர்ந்த கட்டனைப் பொருள்கள் பா', கமர்.

செய்தி - 1) செயல் 2) உழைப்பு 3) கூறும் பொருள். எ-டுஞானச்செய்தி.

செய்பவர் - உழுபவர், உழைப் பவர். எ-டு செய்பவர் செய்திப் பயன் வினைக்கும் செய்யேபோல் (சிபோ பா 10)

செய்வது -செய்யும் இடமாகிய உடல்.

செய்வினை - ஆகாமியம்

செயிமினி - பா. சைமினி. செயிர் - குற்றம் எ-டு செயிர் உறுந்துன்பம்.

செருக்கு - அகந்தை,

செருத்துணை நாயனார் - வேளாளர். தஞ்சாவூர்-சோழநாடு, சிவ பத்தர். இலிங்கவழிபாடு (63) செல்லாது- சிந்தியாது.

செல்லும் - அணையும்.

செலு - சேரி வழக்கு செவுள். எ-டு ஏழ்க்கடல் செலுவில் (சிசிய 267)

செலவுகள் எழுதுக - பொருந்தாது என்று நீக்குக.

செவ்விதின் - வருத்தமில்லாமல்,

செவி அறிவுறுத்தல் - உபதேசித்தல்.

131