பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அஞ்செழுத்துத் தாண்டவம்

அஞ்செழுத்துத் தாண்டவம்


அஞ்செழுத்துத் தாண்டவம் - ஐந்து எழுத்து நடனம் அல்லது கூத்து. இது தத்துவ நடனம்; ஊன நடனம், ஞான நடனம், ஆனந்த நடனம் என மூவகை இதனை நிகழ்த்துபவர் கூத்த பெருமானா கிய சிவன். இதனை உண்மை விளக்கம் 9 பாடல் களில் (31-39) விரிவாக விளக்குகிறது. அதன் சாறம் பின்வருமாறு:

1) நல்ல தவம் செய்தோர் காணு தற்கு ஏற்றவாறு, நாத அந்த முடிவிலே அஞ்செழுத்தே திருமேனி யாகக் கொண்டு ஐயன் ஆடுவான் (31)

2) எட்டும் இரண்டும் உருவான ஆன்மாவிலே, சிவன் சிவாய நம என்னும் திருவெழுத்து அஞ்சாலே,ஆன்மாக்களின் பிறவியற ஆடுவான் (32)

3) உன்னுதற்கரிய தன் திருவடியிலே நகாரமா கவும் கூடும் திருவுந்தியிலே மகாரமாகவும் திருத்தோனிலே சிகாரமாகவும் திருமுகத்திலே வகாரமாகவும் திருமுடியிலே யகாரமாகவும் ஆகஇம் முறையில் நமசிவாய என்னும் அஞ்செழுத்தே திரு மேனியாகக் கொண்டு ஐயன் ஆடுவான் (33)

4) டமருகம் ஏந்திய திரு அந்தத் திலே சிகாரமாகவும் ஆர்க்கும் திரு அந்தத்திலே யகாரமாக வும், தீ ஏந்திய திரு அந்தத் திலே நகாரமாகவும், முயல கனை மிதித்த அடியிலே மகார மாகவும் ஆக இம்முறையில் அஞ்செழுத்தே திருமேனியாகக் கொண்டு அம்மை அப்பன் ஆடுவான் (34).

5) ஓம் நல்ல திருவாசியாகவும், அதைவிட்டு நீங்காத அஞ்செழுத்து உள்ளொளியாகவும் இருப்பதைச் செருக்கற்றவர் அறிவர். எழில்மிகு திருவ்ம் பலத்தில் எம்பெருமான் ஆடுவதைக் கண்டவர் இறப்பு பிறப்பு அற்றவராவார் (35).

6) டமருகம் ஏந்திய திரு அந்தத்திலே படைப்பாகவும் தோயும் திரு அந்தத்திலே ஆன்மா காப்பாகவும், தீ ஏந்திய திரு அந்தத்திலே மலமழிப்பாகவும், உறுதியாய் ஊன்றிய திருவடி யிலே உலகை மறைக்கும் திரோதனமாகவும், தூக்கிய திருவடியிலே அருள் முத்தியாகவும், ஆக இம்முறையில் முத்தி பஞ்சகிருத்தியமே திருக்கூத் தாக அமையும் (36).

7) டமருகம் ஏந்திய திரு அந்தத்தி னாலே மாயையை நீக்கி, தீ ஏந்திய அந்தத்தாலே வல் வினையைச் சுட்டு ஊன்றிய திருவடியினாலே அருளே உலகமாக நிறுத்தி, அன்பால் இன்பக் கடலில் ஆன்மாவை ஐயன் அழுத்துவன். இதுவே அவன் திருக்கூத்துமுறை.

8) பேசா ஞானிகள் திருவருளால் மும்மலத்தை நீக்கி, ஆன்ம போதம் முடிகின்ற இடத்திலே தோன்றுகிற இன்ப வெள்ளத்திலே திளைத்து மகிழ்வார்கள். ஆன்மாக்களைக் காக்க வேண்டும் என்னும், இவ்வன்பையே திருமேனியாகக் கொண்டு திரு அம்பலத்தே ஐயன் ஆடுவான் (38).

9) ஒப்பற்ற இறைவன் அஞ்செழுத்து மிகுந்த அன்பே திரு மேனியாகக் கொண்டு பரையே திருவம்பலமாகிய இடமாக நின்று, பாதி வரைமகள் காணும் படி அன்பினாலே திருமேனி

6