பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சைவ வழிபாடு

சொரூபம்


சரியை அருச்சனை புரிதல். கிரியை கொடி மரத்தின் கீழி ருந்து தியானஞ் செய்தல் யோகம். பரம்பொருளோடும் ஒன்று நிலை ஞானம். ஆலயத்தைச் சிவன் என்று வழிபட வேண்டும். கோபுர வாயில் வழியாக உள்ளே சென்று வலம் வந்து கொடி மரத்தின் வழியாகக் கோயிலி னுள் புகுந்து திருமூலப் பெரு மானைப் பூசனை செய்து வழிபட வேண்டும். சைவ வழிபாட்டில் திருநீறுப் பூசுதலும் உருத்திராக்கம் அணி தலும் திருவைந்தெழுத்து ஒது தலும் குருவிடம் தீக்கை பெறு தலும் நீராடுதலும் இன்றியமை யாதவை. வழிபாட்டில் பயன் படுத்தும் பொருள்களையும் நம் உறுப்புகளையும் உரிய முறையில் தூய்மை செய்ய வேண்டும். வழிபாட்டிற்குத் தேவையான தெய்வத் தன்மை பெற வேண்டும். மனத்தை ஒரு நிலைப்படுத்தி இறைவனை வழிபட வேண்டும். திருஞான சம்பந்தர் முதலிய அருளாளர்கள் தாம் ஞானம் பெற்ற போதிலும், அடியார் கூட்டத்தோடு தலங்கள் தோறும் சென்று வழிபட்டது. இங்கு நினைவு கூரத்தக்கது. ஆலய வழிபாட்டில் வலம் வருவதால், மல மறைப்பு நீக்கு வதற்கேற்ற மந்ததர அறிவுப்பக் குவம் உண்டாகும். கிரியை யால் மந்த பக்குவமும் யோகத் தால் தீவிரப் பக்குவமும் உண் டாக்கிச் சிவஞானம் விளங்கத் துணை செய்யும் என்பது வெளிப்படை...

"அம்மலம் கழீஇ அன்ப ரோடு மரீஇ

மாலற நேயம் மலிந்தவர் வேடமும்

ஆலயந்தானும் அரன் எனத் தொழுமே"

(சிபோநுபா 12)

சைவ விழாக்கள் - 1) மாமகம் . குடந்தை 2) சித்திரைத்திரு விழாமதுரை 3) தேர்த்திரு விழா - திருவாவரூர் 4) திருக் கார்த்திகைத் தீபம் திருவண் ணாமலை 5) ஏமூர்த் திருவிழா திருவையாறு 6) அறுபத்து மூவர் திருவிழா - மயிலை, சென்னை .7)ஆருத்திராதரிசனம் சிதம்பரம் 8) பங்குனி உத்திர விழா -பழநி 9) படித்திருவிழா - திருத்தணிகை 10) தைப்பூசம் வடலூர் 11) வைகாசி விசாகத் திருவிழா - திருச்செந்தூர்.

சைவாகமம் - சிவாகமம்.

சைனம், சைன மதம்- வேத நெறியை ஏற்காத சமயம். இதன் முதல்வர் மகாவீரர் - வேறு பெயர். ஆருகதம், சமணம் அவைதிக மதம்

சைனன் - சமணன், புத்தன்.

சைனாகமம் - மூன்று 1) அங்க ஆகமம் 2) பூர்வ ஆகமம் 3) பகுசுருதி ஆகமம் என முப்பகுதிகளைக் கொண்டது சைன சமய நூல்.


சொ

சொப்பனம் - கனவு. ஐந்து காரிய அவத்தைகளில் மூன்றாவது நிலை.

சொப்பனத் தானம் - கண்டம்.

சொர்க்கம் - பா. சுவர்க்கம்.

சொரூபம் -1) உண்மை 2) பதி,

137