பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல் சுடர் மூவா

தோல்வித்தானம்


இதில் எழுத்து, திணை, அகம், புறம் பற்றி வருவன எல்லாம் இக்கருத்துகளைக் கொண்டவை. எ-டு 1) எழுத்து வகை - முப்பொருள்கள்-2) பால்வரை தெய்வம் 3) கந்தழி.

வினையே செய்வது செயப்படுபொருளே
நிலனே காலம் கருவி என்றா
இன்னதற்கு இதுபயன் ஆகஎன்னும்
அன்னமரபின் இரண்டொடுந்தொகை
ஆயெட்டு என்ப தொழில்முதனிலையே

தொல்.சொல்.595.


இந்நூற்பாவிற்கும் சைவ சித்தாந்தத்திற்குமுள்ள தொடர்பை மறைஞான தேசிகர் பின்வருமாறு:
"வினை - ஆன்மாக்கள் செய்யுந்தொழில். ஆன்மா செய்யப்படுபொருள்-செய்பவன். செய்வது இருவினை. நிலனே அவ்வான்மாக்கள் இருக்கும் புவனம். காலம்-முக்காலங்களையும் உண்டாக்கும் காலத்தன்மை
கருவி -36 தத்துவம்.
இன்னதற்கு இருவினைப் பயன்களைப் புசிக்க வேண்டிய காரணம். இது பயன் சுகதுக்கங்களைப் புசித்துத் தொலைத்த பின் கன்ம க்ஷயம் பிறந்து மோட்சம் அடைக என அறிக”.

தொல் சுடர் மூவா - அநாதியான முதல்வன்.
தொல்லை - பழமை.
தொழில் - உயிர் அல்லது கருவியின் செயல். பா. ஆன்மாவின் தொழில்கள்.
தொழிற்கருவிகள் - பா.ஆன்ம தத்துவம்.
தொழிற்படும் சொல் - ஏவும் வாக்கியம்.
தொழிற்பொறிப் புலன்கள் - வசனம், கமனம், தானம், விசர்க்கம், ஆனந்தம்
தொழுகை - வழிபாடு.
தொழுகை வலி - வழிபாட்டு வலிமை.
தொழும்பு - அடிமை
தொள்ளை - குற்றம். எ-டு தொள்ளைகொள் ஆகம் (சிசிபப178)

2) துளை தொள்ளை உடல்.

தொன்மை - அநாதி அன்றே.

தொன்று தொட்டு வருதல் - முன் தொடங்கி வருதல்.

தோ


தோகை - கூந்தல்.

தோகையார் - கூந்தல் கொண்ட பூவையர். இங்கு இவர்கள் பரவை நாய்ச்சியாரும் சங்கிலி நாய்ச்சியாரும் ஆவர்.
தோடம் -குற்றம்.
தோடு -காதணி, தோடுடைய செவியன். ஆரம்முடி தோடு நாண் (சிசிபப 258).
தோத்திரம் - சமயத்தின் ஒரு கண், இறைவன் புகழ்பாடுவது. தமிழில் உள்ளதுபோல் பக்திப் பாடல்கள் எந்த உலகமொழி இயக்கத்திலும் இல்லை என்று கூறலாம். இம்மை மறுமை வாழ்வைத் துய்க்க உதவுவது.
தோத்திரமும் சாத்திரமும் - இவை சைவாகமங்களுக்கே உரியவை.தோத்திரம் திருமுறையாகிய 12. சாத்திரம். 28.மெய்கண்ட நூல்கள்.14 பண்டார சாத்திரங்கள் 14.
தோல்வித்தானம் - அளவை வழக்குரையில் பேசத் தெரியாத நிலை. இது மயங்கிப் பேசு

163