பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நமிநந்தி அடிகள்

நன்னெறி


நமிநந்தி அடிகள் - மறையவர். ஏமப்பேறுார் - சோழ நாடு. திருவாரூர் அரநெறி ஆலயத்தில் திருக்குளத்து நீரால் திருவிளக்குத் தொண்டு செய்தவர். இலிங்க வழிபாடு (63).

நயப்பு - விருப்பு, நாயகன் கண் நயப்பால் (சிசிசுப72)

நயம் - பயன், நியாயம்.

நயனம் - திருநோக்கம். தீக்கை வகைத் தொடர்பானது.

நரகம் - பொய்யர் வாழுமிடம் ஒ. சொர்க்கம்.

நரசிங்கம் - திருமால். எ-டு நர சிங்கம் வாமனனாய் வென்றி (சிசிபப266).

நரசிங்க முனையரைய நாயனார் - குறு நில மன்னர். திருநாவலூர் நடு நாடு. திருவாதிரை தோறும் அடியார்க்கு அமுது செய்வித்து 100 பொன்னும் கொடுத்து வந்தவர் சங்கம வழிபாடு (63).

நரர் - மனிதர். ஒ. தேவர்.

நரி உழுவை- நரியம் புலியும். எ-டு அரியினொடு (சிங்கத்தோடு) நரிஉழுவை ஆதியாக (சிசிபப 100).

நலன், நலம் - குணம் மேம்பாடு.

நல்லாய் - நல்லறிவுள்ள மாணவனே.

நல் உணர்வு - பேராற்றல்.

நல் மார்க்கம் நால்- 4 நல்ல சமய நெறிகள் பா. மார்க்கம்.

நல்ல சிவஞானம் - நலந்தரும் சிவ அறிவு.

'நல்ல சிவதன்மம் - நலந்தரும் சிவ தர்மம் .

நல்ல சிவயோகம் - நலந்தரும் சிவப்பயிற்சி.

நல்லார் - சிவஞானமே சிறந்த நலம். அந்நலத்தைப் பெற்றவர்கள் நல்லோர் எனப்படுவர்.

நல்வினை- நலம் பயக்கும் வினை. அதாவது புண்ணியம்.

நலிதல் - வருந்துதல்.

நவம்- ஒன்பது. நவம் தரும்பேதம்

நவக்கிரகம்- 9 கோள்கள் 1) ஆதித்தன் 2) சோழன் 3) அங்காரன் 4) புதன் 5) பிரகற்பதி 6) சுக்கிரன் 7) சனி 8) இராகு 9) கேது.

நவா- வாசி- திருவடி பெற எய்திய உயிர், குற்ற மற்றதாகிய மறைப்பாற்றல் எனப்படும் நகரத்துக்கும் சிறப்பாற்றலாகிய வகரத்துக்கும். நடுவில் நில்லாது, திருவருள் சிறப்பாற்றலாகிய சிகரத்துக்கும் நடுவில் நிற்பதே முறையாகும். இவை முறையே சிவயநம, சிவயசிவ ஆகும்.

நவையம் நலனும் - குற்றமும் குணமும் தீயதை நல்லதெனல்.

நள், நண்- நடுவே.

நள்ளார் - பகைவர்.

நறவு - தேன்.

நற்கணத்தார் - நல்ல தேவர் கூட்டம்.

நற்கல் - சூரிய காந்தக்கல்.

நற்சார்பு - உயர்ந்தோர்.

நற்றவர் - நல்ல தவம் உடையவர்.

நற்றானம் - நாலாந்தானமாகிய திரோதன ஆற்றல்.

நனவு - சாக்கிரம், விழிப்பு.

நன்மை- நல்லது, முத்தி, ஒ.தீமை.

நன்னுதல் - புருவந்டு.

நன்னெறி - நன்மைக்கு ஏதுவாகிய நெறி, எ-டு சன்மார்க்கம்

166