பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அத்தரி

அத்துவித அதிகரணம்


அத்திரி - 1 ஏழு முனிவர்களில் ஒருவர் 2. தர்ம நூல் 18 இல் ஒன்று 3.பார்வதி 4இறைவன் 18 அவதாரங்களில் ஒன்று

அத்திரிகுப்தர் - அகத்திய கோத் திர அந்தணர், காச்மீர சைவ சாத்திரத்தில் மிக்க தேர்ச்சி பெற்றவர். கி.பி. 8 ஆம் நூற் றாண்டு.

அத்தின்-ஆற்றின்.எ டுஅத்தின் அளவறியாது (சிசி பப97),

அத்து-வழி, ஆறு. எடு அத்தின் அள வறியாது இக் கரையோர் தம்மை (சிசிபப97),

அத்துவ இலிங்கம் -' தத்துவ வடிவமான இலிங்கம்.

அத்துவா - வழி, ஆறு.

அத்துவா ஆறு- வழுவிலா வழிகள் ஆறு. வீடுபேறு அடைவதற்கும் ஆன்மவினை அடை வதற்குமுரிய வழிகள்.மந்திராத் துவா (மந்திரங்கள் 11), பதாத் துவா (பதங்கள் 81), வர்ணாத் துவா (வன்னங்கள் (51), புவ னாத்துவா (புவனங்கள் (224), தத்துவாத்துவா (தத்துவங்கள் 36) கலத்துவா (கலைகள் 64). அத்துவாக்களைப் படிப்படி யாக உயிர் விட்டுச்செல்லுதல் பாசநீக்கமாகும்.

அத்துவா சுத்தி - தீக்கை நடைபெறுங் காலத்தில் ஆசாரியன் ஆறு அத்துவாக்களிலும் சஞ்சி தமாய் இருக்கும் கன்மங்களைப் போக்குவார்.

அத்துவா சைவம் - சைவம் 16 இல் ஒன்று.

அத்துவா சோதனை- அத்துவா ஆய்வு, படிவழி ஆய்வு, நிரு வாணத் தீக்கையில் ஆசாரியர் மாணவனுக்கு இச்சோதனை யைச்செய்வார். அவனதுசஞ்சி தத்தைப் போக்கும் முகத்தான், அஞ்ஞானத்தைப் போக்கி, ஞானத்தைத் தருவார். இதில் ஆன்மா ஐந்து கலைகளையும் கடந்து,மேலே சென்று தூய தாய் இறைவனை அடையும்.

அத்துவாதத்துவம் - இறைவன் திருமேனி அத்துவாக்களாலும் ஐந்து மந்திரங்களாலும் (மறை மொழிகள்) ஆனது. அவையாவன:

1.சொல் உலகம் : மறைமொழி - குருதி (மறைமொழிவழி), பதம் - முடி (சொல்வழி), வன்னம் - தோல் (எழுத்துவழி) 2.பொருள் உலகம் : புவனம் - மயிர் (உலக வழி), தத்துவங்கள் ஏழுதாது (பொருள் வழி)

ஐந்து மறைமொழியாவது -' தலை,முகம், இதயம் (நெஞ்சம்), மறைவிடம், திருவடி. இது முதல்வனது முழு உணர்வையும் வடிவமைப்பையும் குறிப்பது என்பது மரபு.

அத்துவா மூர்த்தி- வழிகாட்டும் இறைவன்

அத்துவித நிலை - ஒருவந்த நிலை

அத்துவிதம், அத்வைதம்-1இரு மையில் ஒருமை 2, ஏகான்ம வாதம் பா. துவிதம்

அத்துவித அதிகரணம் - சிவ ஞான போதம் 2 ஆம் நூற் பாவில் முதல் அதிகரணமான “அவையே தானே ஆய” என்பது இதில் அத்துவிதம் பற்றி விளக்கம் தரப்படுவதால்,இது அத்துவித அதிகர்ணமாகும்.

10