பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நீர்நிலைகள்

நூனங்கள்


நீர்நிலைகள்-கூவல், ஆழி,குளம், குழிகால், வாவி ஆகியவை வருபுனல் ஆகும் (சிநி3)
நீலகண்டசிவாசாரியார் - வேதாந்த சூத்திரத்திற்குச் சிவாத்துவிதப் பக்கமாகப் பாடியம் செய்தவர். வேதாகம இதிகாச வல்லுநர். வேதமும் சிவாகமும் ஒன்றே என்றவர்.
சங்கராச்சாரியார் போல் நன்கு மதிக்கப்படுவர்.
நீலாதி - நீலம், எ-டு பொன்மை.நீலாதி,வன்னம் (சிசிசிப 88)
நீள்நாகர் - நெடுவானவர்.
நீள்வாசியான் - நெடும் போக்குடைய சிவன்.
நீற்றறை - சுண்ணாம்புக் காளவாய். திருநாவுக்கரசரைச் சமணர்கள் 7 நாட்கள் இவ்வறையில் பூட்டி வைத்திருந்தும் அவர் வேகாது பிழைத்தது இங்குக் குறிப்பிடப்படுகிறது. பா. சமணர் கொடுமைகள் (திப 71)

நு

நுகர்தல்' - துய்த்தல்.
நுகர்வினை - பிராரத்துவம்,ஊழ்.
நுங்க - நீங்க. எ-டு மலங்கள் எல்லாம் நுங்க நோக்கி ஒதுமிய.
நுட்பம் - நுண்மை.
நுண்ணுடம்பு - சூக்கும உடம்பு.
நுண்மை - சுத்தமாயை சார்ந்தது.
நுணுகுதல் - சிறுத்தல்.
நுதல் - புருவநடு, இலாபம்.
நுதலிய பொருள் - நூலில் கூறப்பட்ட பொருள்.
நுதலார் - அழகிய நெற்றியுள்ள அரிவையர்.
நுதலுதல் - கருதுதல்.

நுந்துழி - தூண்டுதல் விடுதல் எ-டு நுண்நூற் குடம்பை நுந்துழி போல் (சிநி4).
நுழைதல் - உட்செல்லுதல்.

நூ


நூக்கு - சென்று.
நூல் - பனுவல்.
நூல் ஆகமம் - வேதாகமம். இறைவன் அருளிச் செய்தது. இது கரும காண்டம், உபாசனா காண்டம், ஞான காண்டம் என மூவகை.
நூல் இரண்டு - வேதநூல், சைவ நூல்.
நூல் உபதேச முறை - திருவருள் வேண்டித் தம் குருவை வழித் துணையாகக் கொண்டு, நூல் நுவல் பொருளைக் கூறுவ தாகும். சிவப்பிரகாசத்தில் இறுதியில் இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நூல் கருத்து - நூல் செய்யும் ஆசிரியன் தான் யாக்கும் நூலின் கருத்து என்ன என்று கூறுதல். சிவப்பிரகாசத்தில் அது பிற புன்சமயக்கூற்றை மறுத்துச் சைவத்தின் உயர்வை நிலை நாட்டுதல் ஆகும்.
நூல் பிற - சமயநூல், பூருவபக்க நூல் முதலியவை.
நூல் மூன்று - முதல்நூல்; வேதம், சிவஞானபோதம். வழி நூல் : உபாகமம், சிவஞானசித்தி யார் சார்பு நூல் வேதாங்கம் சிவப்பிரகாசம்.
நூற்பயன் - அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்கள்.
நூறு - சுண்ணாம்பு.
நூனங்கள் - பாவ புண்ணியங்கள்.

172