பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பஞ்ச கலைப் பிரணவம்

பஞ்சகோசம்


உலகங்களாகக் கீழிருந்து ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொன்றாக அழிந்து வரும். எல்லாவற்றிற்கும் மேலேயுள்ள சாந்திய தீத கலையில் உள்ளது அழிவதே முற்றழிவு. இது உருவ சங்காரம் மகாசங்காரம் எனப்படும். இதனைச் செய்பவன் மகாசங்கரன். உலகத்தை மாயையினின்றும் தோற்றுவித்து ஒடுக்குபவனும் அவனே. அயன் படைத்தலைச் செய்பவன் திருமால் நிலைபெறச் செய்பவன், அரன் அழிப்பவன். முற்றழிப்புக் காலத்தில் அரனே உலகைத் தன்னுள் ஒடுக்குகிறான். இக்காலத்தில் அயனும் மாலும் தத்தம் நிலையிலிருந்தால், முற்றழிவு ஏற்படாது. இவர்கள் இருவரும் அரனின் ஏவலால் தத்தம் தொழிலைச் செய்கின்றனர்.

பஞ்ச கலைப் பிரணவம்- ஒம் என்னும் பிரணவத்திற்குப் பல்வேறு கலைகள் (கூறுகள்) உண்டு. இவற்றில் பஞ்சகலைப் பிரணவமும் ஒன்று. இது 5 கூறுகளைக் கொண்டது. இவை அகாரம், உகாரம், மகாரம், விந்து, நாதம் என்னும் ஐந்து இவ்வைந்தும் சேர்ந்ததே ஓம் என்னும் பிரணவம், ஒம் என்னும் சமட்டிப் பிரணவமே அதோமுகம்.

பஞ்சகவ்வியம்- பா. ஆனைந்து.

பஞ்ச கிருத்தியம்- படைப்பு, திதி, அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் கடவுளின் ஐந்தொழில்கள். இவை ஆன்மாக்கள் மும்மலங்கனை ஒழித்து, வீடுபேறு அடையப் பயன்படுபவை.

பஞ்ச கிலேசம்- ஐங்குற்றம், பிர கிருதியின் காரியமாக ஏற்படும் 5 குற்றங்கள். அவையாவன; அவிச்சை, அகங்காரம், அவா, ஆசை, கோபம். இதனைத் திருவள்ளுவர் காமம் எனக் கூறுவார்.

விளக்கம்

1) அவிச்சை; நல்லதைத் தீயது என்றும் தீயதை நல்லது என்றும் இது மதிப்பது.

2) அகங்காரம்; செருக்கு.

3) அவா, இன்றியமையாததாய் உள்ளதைப் பெற நினைப்பது இது

4) ஆசை. தான் பெற்றுள்ள பொருள்களின் மேலுள்ள விருப்பத்தால் அதை விட மறுப்பது,இது

5)கோபம்; சினம். வள்ளுவர் வகைப்படி அவாவும் ஆசையும் சேர்ந்தது காமம் அவிச்சையும் அகங்காரமும் சேர்ந்தது மயக்கம்.

பஞ்சகோசம்- கோசம் - உடம்பு. ஐந்து உடம்பு. அவையாவன; அன்னமயகோசம் (துலசரீரம்பருவுடல்), பிராணமயகோசம் (உயிர்வளி உடம்பு), மனோமய கோசம் (குணஉடம்பு), விஞ்ஞானமயகோசம் (அறிவுடம்பு), ஆனந்தமயகோசம் (இன்ப உடம்பு)

அன்னமயகோசம்; பூதம் 5, ஐம்பொறி 5, தொழிற்பொறி 5 ஆக 15 கொண்டது. பிராணமயகோசம்; ஐம்புலன், சித்தம் நீங்கிய அகக்கருவி ஆகியவற்றைக் கொண்டது.

மனோமயகோசம்- பிரகிரு தியே சித்தாய் நிற்பது.

176