பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பஞ்ச சத்தி

பஞ்சயாகம்


விஞ்ஞானமயகோசம், மாயை ஒழிந்த வித்தியா தத்துவங் களைக் கொண்டது. ஆனந்தமயகோசம், இது மாயையை மட்டும் கொண்டது.

பஞ்ச சத்தி- ஐந்தாற்றல், அவையாவன, பராசத்தி, திரோதன சத்தி, இச்சாசத்தி, ஞான சத்தி, கிரியாசத்தி,

பஞ்ச சபை- ஐந்தவை. 1) திருவாலங்காடு இரத்தின சபை 2) சிதம்பரம் கனகசபை 3) மதுரை- வெள்ளியம்பலம் 4) திருநெல்வேலி தாமிர சாலை 5) திருக்குற்றாலம் சித்திரசாலை.

பஞ்ச சமிதி- ஐந்து நியமங்கள். அவையாவன. ஆகாரசுத்தி, திருப்தி, தவம் அத்தியயனம், தெய்வபத்தி.

பஞ்ச சாதாக்கியம்- ஐவகைச்சிவ பேதங்கள்; சிவசாதாக்கியம் அமூர்த்தி சாதாக்கியம், மூர்த்தி சாதாக்கியம், கர்த்திரு சாதாக்கியம், கன்ம சாதாக்கியம்.

பஞ்சசீலம்- 1) இன்னா செய்யாமை 2) உண்மை 3) ஒதுநிலை 4) சுருக்கம் 5) மாணி.

பஞ்சசுத்தி- மானபூசையில் பயன்படும் 5 சுத்திகள்; பூதகத்தி, ஆன்ம கத்தி, திரவியசுத்தி மந்திரகத்தி, இலிங்ககத்தி. காமம், கொலை, கள், பொய், களவு.

பஞ்ச திராவிடம்- திராவிடம், ஆந்திரம், கன்னடம், மகாராட்டிரம், கூர்ச்சரம்.

பஞ்ச பல்லவம்- பூசைக்குரிய ஐம்பொருள்கள். ஆத்தி, மா, முட்கிளுவை, முல்லை, வில்வம் என்னும் 5 தளிர்கள்.

பஞ்ச பிரமம்- 1) ஈசானம், தற்புருடம், அகோரம், வாம தேவம், சத்யோசாதம் என்னும் சிவனின் 5 முகங்கள். 2) சிவனின் 5 திருமுகங்கள் பற்றிய மந்திரங்கள்.

பஞ்ச புராணம்- தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் ஆகியவற்றுள் ஒவ்வொரு பாடலாக நாள்தோறும் வழிபாட்டில் ஆத்மார்த்த பூசையிலும் பரமார்த்த பூசையிலும் 5 திருப் பாடல்களைப் பத்தியுடன் வழிபடும் மரபு.

பஞ்ச பூதத் தலங்கள்- ஐம்பூத இடங்கள் 1) திருஆரூர்- நிலம் 2) திருஆனைக்கா- நீர் 3) திருவண்ணாமலை- தீ 4) திருக்காளத்தி- வளி 5) சிதம்பரம்-விசும்பு.

பஞ்சமந்திரம்- ஐந்து மந்திரம். தலை, முகம், நெஞ்சு, திருவடி, மறைவிடம் என்றும் 5 மறை மொழிகள் பா. அத்துவாக்கள்.

பஞ்சமலம்- ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதனம்.

பஞ்ச முத்திரை- திருநீறு, உருத்திராக்கம், பூணுரல் உந்தரீயம், உட்டிணிடம் என ஆசாரியக் குரிய 5 அடையாளங்கள்.

பஞ்சமூர்த்தி- 1) சிவனுக்குரிய சதாசிவன், மகேசுவரன், உருத்திரன், விட்டுணு, பிரமன் என்னும் 5 மூர்த்தங்கள் 2) விநாயகன், முருகன், சிவன், உமை, சண்டேசுவரன் என்னும் ஐவகைக் கடவுளர்.

பஞ்சயாகம்- கர்மயாகம், செபயாகம், ஞானயாகம், தபோயாகம், தியானயாகம் என்னும் ஐவகை வழிபாட்டுமுறை

177