பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அத்துவிதக்கொள்கைகள்

அந்தம்



அத்துவிதக்கொள்கைகள்-அத்துவித விளக்கத் தொடர்பாக இவை எழுந்தவை. வகை மூன்று. 1. அபேத வாதம்: வேறன்மைக் கொள்கை. "இறைவனும் உயிர்களும் பொன்னும் பணியும் (அணிகலன்) போல ஒன்றே; வேறல்ல” என்பர் ஏகான்மவாதிகள். இதற்கு மறுப்பாக 'உடலில் உயிர் போல’ என்று மெய்கண்டார் கூறுகின்றார். 2. பேத வாதம்; வேறு என்னுங் கொள்கை “உயிரும் இருளும் ஒளியும் போல் உள்ளார்கள்” என்பர் பேதவாதிகள். உயிரும் இறைவனும் வேறுவேறு பொருள் ஆவதற்குச் சைவ சித்தாந் தத்தில் கண்ணொளியும் கதிரவன் ஒளியும் உவ மையாகக் கூறப்பெறும். 3. பேதா பேதவாதம்: வேற்றுமையில் ஒற்றுமை. “உயிரும் இறைவனும் ஒன்றுதான்; வேறுதான்” என்பர் பேதா பேதவாதிகள். பேதம், அபேதம் ஆகிய இரண்டும் வேறுபட்ட தன்மைகள். அவை ஓரிடத்து ஒருங்கு நில்லா. அவ்வாறே இறைவன் உயிர் என்னும் இரண்டிடத்தும் ஆகும். அதனால் பேதாபேதம் என்பது பொருளற்றதாகிறது. சிவஞானபோதத்தில் நூற்பா, 2, 5, 11 ஆகியவற்றால் அத்து விதம் முழுமையாக விளக்கம் பெறுகிறது.

அத்துவித சம்பந்தம் - இருமையில் ஒருமைத் தொடர்பு.அதாவது,உலகத்திற்கும் இறை வனுக்குமுள்ள தொடர்பு கலப்பினால் ஒன்றாயும், பொருள் தன்மையால் வேறாயும் உயிர்க்கு உயிராகும் தன்மையால் உடனாயும் இருப்பது. இவை இறைவனின் மூன்று இயல்புகள். இதுவே மெய் கண்டார் கண்ட மெய்ப் பொருள். மெய் கண்டார் கூறும் இந்த அத்துவிதமே சைவ சித்தாந்த மாகும். இதனை உமாபதி சிவம் பின்வருமாறு குறிக் கின்றார்: "உடலில் உயிர் போலக் கலப்பினால் ஒன்றாயும், கண்ணில் அருக்கன் போலப் பொருள் தன்மையில் வேறாயும் ஆன்ம போத மும் கண்ணொளியும் போல, உயிர்க்கு உயிராதல் தன்மை யால் உடனாயும் இவ்வாறு இருபொருள் பிரிப்பின்றி உடனாய் நிற்றலாகிய அத்து விதத்தை (சைவ சித்தாந்தம்) உடையது.”

அத்துவிதி - அத்துவித நெறி முறை. எ.டு. அத்துவிதி அன்பில் தொழு (சி போ பா 78).

அத்துவைதி-ஏகான்மவாதி அத்துறைகள் கண்டு - கண் முதலிய பொறிகளை ஆன்மா வானது பற்றி, அதுவதற்குரிய உருவம் முதலிய பண்பு களைத் தெளிவாக உணர்ந்து.

அத்துர்டு - அப் பூதாசாரம் முதலிய உடம்பின் ஊடாக,

அத்தை - தலைவி, உமையவள்,அதை

அந்தம் - முடிவு.

11