பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாதகர்

பார்த்தனார்



பாதகர் - தீயவர்.
பாதஞ்சசலர்மதம் - உயிர் அருவம் என்னும் கொள்கையுள்ள சமயம்.
பாத தீக்கை - திருவடித்தீக்கை
பாதம் - 1)திருவடி 2)படி நான்கு. 3)கால்.
பாதமுத்தி - பரமுத்தி.
பாதராயணர் - வேதவியாசர்.
பாதவம் - மாலை, மரம்.
பாத்யம் - கால் கழுவ நீர் அளித்தல் வழிபாட்டு முறைகளில் ஒன்று.
பாதிவரை மகளிர் - செம்பாதியாகிய மலையரையன் மகள்.
பாம்பொழியப் பாடுதல் - பாம்பின் நஞ்சு நீங்குமாறு பாடுதல். திருநாவுக்கரசர், சம்பந்தர் ஆகிய இருவரும் பாடி நஞ்சு நீக்கினர். சம்பந்தர் திருமருகலிலும் திருநாவுக்கரசர் திங்களூரிலும் பதிகம் பாடினர். பா. பாலன் மரணம்.
பாமறைக் கிழத்தி - கலைமகள்.
பாயாவேங்கை - வேங்கை மரம்.பொன்.
பாயிரம் - அணிந்துரை. நூல்மரபாகப் பாவில் வழங்கப் படுவது சிறப்புப் பாயிரம் பிறர் சிறப்பு கருதி வழங்குவது.தொல்காப்பியத்திற்குப் பனம்பாரனார் சிறப்புப் பாயிரம் வழங்கியுள்ளார். சிவஞானபோதத்திற்குச் சிறப்புப் பாயிரம் அளித்தவர் பெயர் தெரியவில்லை.
பாயிரப்பொருள்கள் - இலக்கணப் படி 11. ஆனால் சிவஞான போதத்திற்குள்ளது 8மட்டுமே.

1) ஆக்கியோன் பெயர்; சுவேதனன், மெய்கண்டதேவன்
2) வழி; நந்தி முனிகணத்து அளித்த நூலின் வழி
3) எல்லை; தமிழ் வழங்கும் பகுதி
4) நூற்பெயர்
5) யாப்பு
6) நுதலியப் பொருள்
7) கேட்போர்
8) பயன். உயர்சிவஞானபோதம் என்பதனால் உய்த்துணரப்பட வேண்டியவை. கண்ணிருள் தீர்ந்து கண்டு மயர்வறல்.

பாய்பரியோன் - குதிரை மீது எழுந்தருளிய சிவன். தில்லையில் முதல்வனைக் குதிரைமீது மணிவாசகர் எழுந்தருளச் செய்தார். சிவபெருமான் திருவடிப்பேரின்பத்தை அவனருளால் திருவாசகம் திருக்கோவையாகப் பாடினார்; அதனை அப்பெருமானே எழுதியருளும்படிச் செய்தார். (திப 73). பாய்பரியோன் தந்த பரமானந்தப் பயனை.
பாயு - எருவாய் தொழிற்பொறி 5இல் ஒன்று. தொழில் மலக் கழிப்பு.
பாரகர் பரிக்க - காவுவோர் சிவிகை சுமக்க.
பாரகார்க்கயர் - இறைவன் 18 அவதாரங்களில் ஒன்று.
பார் - 1) புத்தன் 2) உலகு - பார் ஆதி ஐந்து. -1) பஞ்ச மூர்த்திகள் 2) பூதம் 5.
பார் ஏழு - உலகம் ஏழு பிலகத் தீவு முதல் புண்டரீகத்தீவு. ஈறா காவுள்ள ஏழு தீவுகள்.
பார்த்தனார் - அருச்சுனன், பஞ்ச பாண்டவர்களில் ஒருவர். இங்

187