பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பார்த்திபம்

பாலாலயம்



குக் குறிப்பிடுவது அர்ச்சுனன் போர்க்களத்தில் கூறிய பொய்யுரை.
பார்த்திபம் - மரம்.
பார்த்து - அறிந்து.
பார்ப்பாய வேடம் - ஆடுவதற்குரிய வேதியர் வேடம். எ-டு பார்ப்பாய வேடங்கட்டி.
பார்ப்பார் - பார்ப்பவர்.
பாரிசேடம் - ஒழிவு.
பாரிசேட அளவை - முப்பொருள்களில் இரண்டு. பதியாகிய சிவமும்

பாசமாகிய உலகமும், இவை இரண்டும் ஒன்றை மற்றொன்று அறியாது என்பதை விலக்க வேண்டும். இதற்கு எஞ்சி நிற்கும் பசுவாகிய உயிரே அவ்விரண்டையும் அறியும் என்று பாரிசேட அளவையால் உணரலாம்.
(மூலத்தில் ’பாதியாகிய சிவமும்’ என்று கொடுக்கப்பட்டுள்ளது. ’பதியாகிய சிவமும்’ என்பது திருத்தம்)

பாரிசேடப் பிரமாணம் - ஒழிபளவை, மீட்சி மொழி மொத்தத் தொகை கண்டு

அவற்றில் கழிந்தவை போக எஞ்சியதைக் காட்டல், எ-டு மூவரில் இருவர் திருடவில்லை மற்றொருவன் திருடினான் என்பது பொருள். இங்குப் பதி பசு பாசம் என்னும் மூன்றில் பசுவிற்கும் பாசத்திற்கும் வினைப் பயனைக் கூட்ட முடியாது என்று விலக்கவே, பதிக்குக் கூட்ட முடியும் என்பதால் பாரிசேடமாயிற்று.

பாரியாயப்பெயர் - இயற்பெயர். அல்லாத பெயர் எ-டு ஆணை என்பது

சத்தியின் பெயர். பா. இயற்பெயர்.

பாலன் - சிறுவன், பிள்ளை. இங்குத் திருஞானசம்பந்தரையும் அப்பூதியடிகள்

மகனையுங் குறிப்பது.

பாலன் செய்த பாதகம் - இளமை பெற்ற சண்டீச நாயனார் தன் தந்தையைக்

கொன்ற பாவமும் புண்ணியமாய் முடிந்தது. இது அன்பர் செய்யும் பாவம்
புண்ணியமாகும் என்பதற்கு எடுத்துக்காட்டு (சிசிசுப19).

பாலன் சேட்டை - மழுவின் செய்தி அல்லது ஒடுங்கும் செயல், புமானகிய

சுத்த புருடன் பிரகிருதியின் சந்நிதியில் மழுவின் செயலைப் போல் அறியாமை பொருந்திய உலகம் பிறப்பு வேறுபாடுகளைக் கொண்டது (சிசிபப260).

பாலன் மரணம் - அப்பூதியடிகளின் மகன் திங்களுரில் நாகந்தீண்டி இறக்க,

அவனைத் திருநாவுக்கரசர் உயிர்ப்பித்தது. எ-டு பாலன் மரணந்தவிர்த்ததுவும் (திப 12).

பால் - ஒன்று, பக்கம்.
பால் ஆழி - பாற்கடல் ஒ மால் ஆழி.
பால் வடிவு - ஐந்து வடிவங்கள்.
பால்வரை தெய்வம் - ஊழ். ஊழ்வினை தானே வந்து உயிர்களைப் பற்றுத்

தன்மை உடையதன்று. அறங்காவலனாகிய இறைவன் :வகுக்கும் வழியே அது செல்வதற்குரியது. பால்வரை தெய்வம் வினையே பூதம் (தொல் சொல் 540) இக்கருத்துப் பெரிய புராணத்திலும் வற்புறுத்தப் பெறுகிறது. “செய்வினையும் செய்வானும் அதன் பயனும் சேர்ப்பானும் மெய்வகையால் நான்காகும் விதித்த பொருள்”

பாலாலயம் - இளங்கோயில், மூலத்தானத்தைப் பழுது பார்த்துப்

188