பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாலாறு

பாவும் மறுப்பும்


புதுப்பிக்கும் காலத்தில் கடவுளை வேறாக ஆவாகனம் செய்து வைக்கும் கோயில்.
பாலாறு - தீர்த்தம் 9 இல் ஒன்று.
பாலினார் - அருளாளர்.
பாலைக் கிழத்தி - பாலைக்குரிய துர்க்கை அல்லது காளி.
பாலை நெய்தல் பாடியது - திருஞானசம்பந்தர் திருநனிபள்ளியில் பாலை நெய்தலாகும்படி பாடினார்(திவ12)பா.திருஞானசம்பந்தர் செய்த அற்புதங்கள்.
பாவகம் - பாவனை, பா. பாவனை
பாவம் - உண்மை. தீவினை.
பாவனாந்தம் - பாவித்தலுக்கு அப்பாற்பட்டது.
பாவனாதீதம் - பாவனையைக் கடத்தல்.
பாவனை - 1)பஞ்ச கந்தங்களுள் ஒன்று. 2) தியானம் வகை 1) கருவிகளோடு கூடிப் பாவித்தல் 2)கருவிகளோடு கூடியும் கூடாதும் பாவித்தல் 3) எய்தியதாகப் பாவித்தல். இப்பாவனைகளைச் சிவஞான போதம் மறுக்கும்(எ.டு) பாவக மேல் தான் அசத்தாம் பாவனா அதீதம் எனில் (சிபோ பா 37)
பாவாடையமுது - கடவுள் முதலியோர்க்கு முன் ஆடையில் படைக்கும் சோறு.
பாவினம்- தாழிசை, துறை, விருத்தம் என மூன்று.
பாவி - பாவகம் செய்தவன்.
பாவிய - பரவிய. எ-டு பாவிய சத்திய ஞான தரிசினிகள்.
பாவும் மறுப்பும் - நூற்பா வரிசையாகச் சிவஞான போதம் மறுக்கும் மதங்கள் பின்வருமாறு:

நூற்பா 1

1)அநேக அந்தவாதி 2)அநேக ஈசுவரவாதி.3)ஆவேசவாதி 4) இரணிய கருப்பவாதி 5) உலகாயவாதி 6) உற்பத்திவாதி 7) சாங்கியர் 8) சிவசாங்கிராந்த வாத சைவர், 9) சிவ சமவாத சைவர் 10)சூனிய ஆன்மவாதி 11) பரிணாம வாதி 12)பாஞ்ச ராத்திரிகள் 13)புத்தர் 14) மாயாவாதி 15) முதற்காரணவாதம்.

நூற்பா 2

1)அநேகஅந்தவாதி2) ஏகான்ம வாதி 3) கிரீடாபிரமவாதி 4) சாங்கியர் 5) சிவாத்துவித சைவர் 6) நையாயிகர் 7) பரிணாமவாதி 8) பாஞ்சராத்திரி 9) மாத்துவர் 10) மீமாஞ்சகர்.

நூற்பா 3

1) இந்திரிய ஆன்மவாதி2) உல காயவாதி 3) ஏகான்மவாதி 4) யோக சாரன் 5) சமூக ஆன்ம வாதி 6) சித்த ஆன்மவாதி 7) சூன்ய ஆன்மவாதி 8) சூக்கும தேக ஆன்மவாதி9) தூலதேக ஆன்மவாதி 10) பிராண ஆன்மவாதி.

நூற்பா 4

1) அந்தக் காரண ஆன்மவாதி 2) ஐக்கிய வாத சைவர் 3)கவுளர் 4)சமணர்5)சாங்கியர் 6)பாஞ்ச ராத்திரி 7) பாசுபதவாதி 8) பாட்டாசாரியர் மதம் 9) பெள ராணிகர் 10) மாயாவாதி.

நூற்பா 5

I) ஈசு அவிகாரவாதி 2) சாங்கியர்.

நூற்பா 6

ஏகான்மவாதி 2) சாங்கியர் 3) சிவாத்துவித சைவர் 4) சிவசம வாத சைவர் 5) சுத்த சைவர் 6)

189