பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவை

பிம்ப பிரதி பிம்ப வாதம்


நையாயிகர் 7) பாதஞ்சலர் மதம் 8) மாயாவாதி.

நூற்பா 7

1)ஈசுர அவிகாரவாதி 2) சிவ சங்கிராந்தவாதி சைவர். : 3)ஏகான்மவாதி 4) ஐக்கியவாத சைவர் 5)சிவாத்துவித சைவர் 6)சிவசமவாத சைவர் 7)சுத்த சைவர் 8)பாடாண வாதி 9)பேதவாத சைவர்.

நூற்பா 8

1)ஏகான்மாவாதி 2)சிவசங்கிராந்தவாத சைவர். 3)சிவாத்துவித சைவர் 4)பேதவாத சைவர். 5)நையாயிகர்.

நூற்பா 9

சிவ சமவாத சைவர்.

நூற்பா 10

1) சுத்த சைவர் 2) மாயாவாதி.

நூற்பா 11

1) ஏகான்மவாதி. 2)பாடாணவாதி 3) புத்தர்.

நூற்பா 12

மறுப்பு இல்லை.

பாவை - பதுமை
பாவை, தோல் - தோல் பாவைக்கூத்து.

பாவை, மரப் - மரப்பாவை இயக்கம்.

பாழ் - சூனியம்.

பாழி - பொருள், கோயில், எ-டு பதமும் பாழியும் சொல்லும் பொருளும்

பாற்கரியன் வாதம், மதம் - பரிணாம வாதத்தைக் கூறியவர். பாற்கரர். இவர் தம்பெயரால் அமைந்தது இக்கொள்கை.

பானு - பகவலன்.

பி

பிஞ்சு எழுத்து -வகாரம் ஆகிய பராசத்தி.
பிடகம் - பெளத்த மறை திரிபிடகம். தேவாரத்தில் இது பிடக்கு எனப்படும்.
பிடகநூல் - அயற்சமய நூலான செளத்திராந்திக (பெளத்த) மதநூல்.
பிடக நெறி -புத்த ஆகமங்களின் வழி.
பிடி - பெண் யானை,ஒ களிறு.
பித்தாந்தம் - பித்த முடிவு. ஒ.சித்தாந்தம்
பித்தி - சுவர்.
பித்து - 1) பேரன்பு 2)மனக்குலைவு.
பிணங்கல் - மாறுபடுதல்.
பிணம் - சவம்.ஒ.நடைப்பிணம்.
பிண்டம் - கருவி.
பிண்டப்பொழிப்பு - நூற்பாவின் பொருளை ஒரு சொல்லேனும் எஞ்சாதபடி எல்லாச் சொற்களின் பொருளையும் முழுமையாகத் திரட்டி உரைப்பது. இதனை மெய்கண்டார் தாம் உரையாது மாணவர்களே உரைத்துக் கொள்ளுமாறு விடுத்தார்.
பிணி - நோய் : வாதம், பித்தம், சிலேத்துமம் என மூன்று.
பிணிப்பு - கட்டு.
பிணிப்புண்ணுதல் - கட்டுண்ணுதல்.
பிம்ப பிரதிபிம்பவாதம் - கேவல அவத்தையின் படி பரபிரமம் மாயையில் பிரதிபிம்பமாகும். அதாவது, இறைவனது சைதன்யம் அந்தக் காரணத்தால் பதியும்போது, அது உயிராகிறது.

190