பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அந்தர்

அதிட்டாணம்


அந்தர் - வானவர். அந்தர் அனைவரும் கூடி, 2. குருடர், மூடர்.

அதிகம்- மிகுதி. ஒ. குறைவு. எ-டு குறைவு அதிகங்கள் தத்தம் (சிசி சுப. 232).

அதிகரணம்- இது கூறு அல்லது நிலைக்களம் என்று பொருள்படும். இதிலுள்ள 5 உறுப்புகள்: 1. கூறப்படும் பொருள் 2. அப்பொருளின் கண் ஐயப்பாடு, 3. ஐயப்பாட்டின் கண் பிறர் கூறும் பக்கம் 4. பிறர் பக்கத்தை மறுத்துரைக்கும் சித்தாந்தத் துணிவு 5.துணிவுக்கு எடுத்துக்காட்டும் இயைபு. இந்த ஐந்தின் நிலைக்களம் இது.

மேற்கோள் - கூறப்படும் பொருள். ஐயப்பாடும் பிறர் கூறும் பக்கமும் இதில் அடங்கும்.

ஏது : பிறர் பக்கத்தை மறுத்துரைக்கும் சித்தாந்தத்துணிவு

எடுத்துக்காட்டு: இயைபு, சிவஞான போத நூற்பா ஒவ்வொன்றும் அதிகரணங்கள் கொண்டது.

அதிகாரம் - 1. நூற்பிரிவு. எ-டு சிவஞான போதம் பொது அதிகாரம், உண்மை அதிகாரம் என்னும் இரு அதிகாரங்களைக் கொண்டது. 2. அறிவு குறைந்து செயல் அதிகமுள்ள இறைநிலை, எ-டு ஆக்கிடும் அதிகாரத்திற்கு (சிசிசுப43) 3. தலைப்பாடு 4 ஆட்டல்

அதிகார அவத்தை - உலகைப்படைக்கும் நிலை

அதிகாரதத்துவம்- வினை அதிகமுள்ள ஈசுவரத் தத்துவம்.

அதிகார மலம் - உலக அதிகாரத்தை விரும்பும் ஆன்ம நாட்டம்.

அதிகார முத்தி - அதிகார சிவத்தைக் கொண்ட முத்தி உடல் பற்றை விடுதலாகும் வேறு பெயர் நின்மல சொப்பனம். சகலவகை ஆன்மாக்களுக்கும் அதிகார சிவம் இதுவே. சிவஞான போதம் நூற்பா 8 இல் “தம் முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த விட்டு” என்பது இதனை உணர்த்தும்.

அதிகாரி - 1. தலைவன். எ-டு நூலுக்கு அதிகாரி. 2. கேட்கப் பதருவமுடையவன். 3. தொடர் புடையோன்

அதிசயம் - அற்புதம், புதுமை, எ-டு இறைவன் திருவிளையாடல்.

அதிசய மாலை - 14 பண்டார சாத்திரங்களில் ஒன்று. ஆசிரியர் அம்பலவாண தேசிகர்.

அதிசூக்கும தேகம் - பூதம், புலன், அறிவுப்பொறி, தொழிற்பொறி, அகக்கருவி, குணம், மூலப்பகுதி, கலாதி என்பவற்றால் ஒவ்வொன்று கொண்ட நுண்ணுடம்பு.

அதிசூக்கும பஞ்சாக்கரம் - பஞ்சாக்கரம் 4இல் ஒன்று.

அதி சூக்குமை - 1. சிவசத்தி பேதங்களுள் ஒன்று. உவர மிக நுண்மை.

அதி சூக்கும பஞ்சாக்கரம் - பஞ்சாக்கரம் 4 இல் ஒன்று.

அதிட்டானம் - பொது, சிறப்பு என இஃது இருவகை. இவ்விரண்டில் ஞான குருவல்லாத ஏனைய உயிர்களிடத்து மறைந்து வேறாய் நிற்பது பொது அதிட்டானம். ஞான குருவிடத்து அவர் தமக்கு விளங்கி ஒன்றாயும் பொருளின் தன்மையால் வேறாயும் நிற்றல் சிறப்பு அதிட்

12