பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிரதட்சினம்

பிரம சூத்திரம்


யாக அகங்காரம், புத்தி, மனம், சித்தம் என்னும் அகக்கருவிகளையும் புருடத் தத்துவத்தையும் செலுத்தும்.

பிரதட்சிணம்- கோயில் பிரகாரத்தை இடப்பக்கத்திலிருந்து வலம் வருதல். ஒ. அப்பிர தாட்சிணம்.

பிரத்தியட்சம்- காட்சி

பிரதிக்ஞை - மேற்கோள்.

பிரதிட்டை- நிலை நிறுத்தல். கோயில் கொள்ளுவித்தல். கலை 5இல் ஒன்று.

பிரதிட்டாகலை- சிவ சத்தியின் 5 கலையில் சீவான்மாவைப் பிறவா நெறியில் உய்க்கும் கலை.

பிரபஞ்சம்- உலகம், விண்ணகம் இது ஐந்து வகைப்படும்.

1) அசுத்தப் பிரபஞ்சம்: பிரகிருதி மாயாகாரியமாகிய சாத்து விகம், இராகதம், தாமதம் என்னும் முக்குணவடிவமாய் அளந்தறியப்படுதல்.

2) சுத்தா சுத்தப் பிரபஞ்சம்: இம் முக்குணங்களையுங் கடந்த ஆணவ மல காரியமாகிய சுக துக்காதி ரூபமாகவும் அளந்தறியப் படுவது.

3) சுத்தப் பிரபஞ்சம்; மலகன்மங் களைக் கடந்த சிவ தத்துவ ரூபாமாய் அளந்தறியப்படுவது

4) சேதனப்பிரபஞ்சம் அறிவுடை உலகமாகிய உயிர்.

5) அசேதனப் பிரபஞ்சம், உயிரற்ற பொருள் உலகம்.

இறைவனால் காரியப்படும் பிரபஞ்சம் நிலம், நீர் காற்று, வான். இவற்றின் கூறாகிய உடல், மலை, மரம், கடல் முதலியவை இதற்கு முதற்காரண மாயை. உயிரால் காரியப்படும்பிரபஞ்சம் குடம், மாடம், மாளிகை, ஆடை, ஏரி முதலியன. முதற்காரணம் இறைவனால் உண்டாகும் காரியப் பிரபஞ்சம்.

பிரபஞ்ச அனுக்கிரகம்- ஆன்மாவிடம் கடவுள் செய்யும் திருவருள்.

பிரத்தியயம்- விகுதி, இடைச்சொல்

பிரதிபந்தம்- ஆணவத்திற்குநேர்ப் பகையானது.

பிரதிபத்தி- சரண் அடைதல். இறைவன் வல்லமையிலும் அருளிலும் முழு நம்பிக்கை வைத்துத் தன்னை முற்றாக அவனிடம் ஒப்படைத்தல் இது பேருடை நெறி.

பிரதிபிம்பம்- எதிர் உரு, நிழல் உரு. . .

பிரபந்தம் - 1) தடை 2) நூல் ஆழ்வார் பாடல்கள் கொண்டது எ-டு நாலாயிர திவ்விய பிரபந்தம், நெஞ்சு விடு துது

பிரபாகரன் மதம்- ஒரு புறச் சமயம்.

பிரம காண்டம்- வேத ஞான காண்டம்.

பிரமகிழத்தி- இறைவி, தேவி, எ-டு பேரின்பமான பிரமக் கிழத்தியுடன் (திப 77)

பிரமகுரு- பிரமத்தை உபதேசிக்கும் ஆசாரியன்.

பிரமஞானம் - இறையறிவு.

பிரமசரியம் - இல்லறம் நீங்கிய வாழ்க்கை.

பிரம சூத்திரம்- வேதாந்த சூத்திரம். இதனைச் செய்தவர் வாதராயணர். வியாசர் தொகுத்த பிரம சூத்திரங்கள் எல்லா இந்து சமயங்களுக்கு மூலம். பா. ஏகான்மவாதம்.

192