பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புரங்கொல் நூல்

புருடன்


புரங்கொல் நூல் - அருச்சுனன் போர் செய்யத் தேரிலே ஏறி நின்று, “இன்று பகைவர்களாக இருப்பவர்கள் எல்லாம் என்னுடைய சுற்றத்தாரே. இவர்களைக் கொன்று அரசாள மாட்டேன்”, என்றான். அவனுக்குத் தேர்ப்பாகனாக இருந்த கண்ணன், அருச்சுனன் மனம் தேறக் கூறியதாவது, "கொல்வது எல்லாம் யாமே செய்வோம். நீ கவலற்க” இது மயக்கச் சொல். திரிபுரத்துள்ளோர் சிவலிங்கத்தைக் கைவிடும் பொருட்டுத் திருமால் புத்த முனிவராக இருந்து தெய்வம் ஒன்றில்லை என்று மயக்குவித்துச் சிவலிங்கத் தைக் கைவிட்டனர். ஆகக் கண்ணன் மயக்குச் சொல் கொண்ட நூலும் சிவலிங்கத்தைக் கைவிட்ட நூலும் இங்குப் புரங்கொல்நூல் எனப்பட்டது. (சிசிபப 293).

புரணம் - நிறைவு.

புரம் - உடல், எ-டு புரங்கொல் நூல்.

புராணம் - உலகத் தோற்றம், ஒடுக்கம், தலைமுறைகள், மரபு வழிக் கதைகள் முதலியவற்றைக் கூறுவதால், ஐந்தழகு உடையது இது. புராணங்கள் ஒன்றுக்கு மற்றொன்று மாறுபடுவன போல் தோன்றினாலும், உண்மையில் அவை ஒற்றுமை கொண்டவை. உயர் நெறிகளைப் புகட்டுபவை. எ-டு பெரிய புராணம், கந்த புராணம், திருவிளையாடல் புராணம்.

புராணம் 18 - சிவபுராணம் 10, விட்டுணு புராணம் 4, பிரம புராணம் 2, சூரிய புராணம் 1, அக்கினி புராணம் 1.

புராணம் 10 - 1) சைவ புராணம் 2) கந்த புராணம் 3) இலிங்க புராணம் 4) கூர்ம புராணம் 5) வாமன புராணம் 6) வராக புராணம் 7) பெளடிய புராணம் 8) மச்ச புராணம் 9) மார்க்கண்டேயபுராணம் 10) பிரமாண்ட புராணம்.

புராணம் 4- விட்டுணு புராணம். 1) நாரதீய புராணம் 2) பாகவத புராணம் 3) கருட புராணம் 4) வைணவ புராணம்.

புராணம் 3- 1) பெரிய புராணம் 2) கந்த புராணம் 3) திருவிளையாடல் புராணம்.

புராணம் 2- 1) பிரம புராணம் 2) பதும புராணம்.

புராணம் 1- சூரிய புராணம் 1. அக்கினி புராணம் 1

புரி, புரிதல் - எப்பொழுதும் மேற்கொள்ளல், செய்தல்.

புரியட்டகம், புரியட்டக உடம்பு - எண் கருவி நுண்ணுடம்பு. அவையாவன. சுத்தம், பரிசம், ரூபம், இரதம், கந்தம், மனம், புத்தி, அகங்காரம்.

புரியட்டருபம் - புரியட்டக வடிவம் பூதான சரீரம் போனால் புரியட்ட ரூபம்.

புருடன் - 1) உயிர் 2) சிவம் 3) அறிவுடைப்பொருள். மூலாதாரத்தில் தொழிற்படும் ஒரே ஒரு கருவி. இங்கு உயிர்ப் படங்கல் என்னும் அவத்தை நிகழ்வது. இதன் குணம் அவித்தை என்றால், பின் அது சடமே. புலன்கள் வழிப்பொருள்களை இது உணரவல்லது. சாக்கிரத்தில் சாக்கிரம், சாக்கிரத்தில் சொப்பனம், சாக்கிரத்தில் கழுத்தி, சாக்கிரத்தில் துரியம், சாக்கிரத்தில் துரியா

197