பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புருவநடுவிலிருந்து

புவனத்துவா



தீதம் என்னும் 5.அவத்தைகளை இது அடைவது. நெற்றிக்குநேரே புருவத்து - இடைவெளி உற்றுப்பார்க்கஒளிவிடும்மந்திரம் பற்றுக்குப் பற்றாய்ப் பரமன் இருந்திடம் சிற்றம்பலம் என்று தெரிந்து கொண்டேனே - திருமூலர் இத் திருமந்திரச் செய்யுள் புருவநடு சிறப்பை விளக்குவது.

புருவநடுவிலிருந்து - அமிழ்தம் ஒழுகும் என்பது யோக நூல் கருத்து. இங்கு அந்த அமிழ்தமே நெய்யாகவும் சுழுமுனை (இரடகலை) என்னும் நாடிகளே சுருக்குச் சருவங்களாகவும் கொண்டு, உந்தித்தானத்தில் ஞானமாகிய தீயில் ஓமம் செய்தல் வேண்டும் என்பது கருத்து.

புருட தத்துவம் - ஐவகையால் உறுபயன்கள் நுகரவரும் காலம். இது சுத்தா சுத்தம் 7இல் ஒன்று. மும்மலங்களோடு கூடியது.

புருடோர்த்தம் - நூற்பயன் நான்கு அறம், பொருள், இன்பம், வீடு.

புருடோத்தம நம்பி -9 ஆம் திருமுறை பாடிய 9 பேரில் ஒருவர்.

புருவ நடு - இலாடம், நுதல், விந்துத் தானம்.

புருவநடு சாக்கிரம் - இதில் நிகழ்பவை இரண்டு கேவல சாக்கிரம், சகல சாக்கிரம்.

புரையும் - ஒழிந்து நிற்கும். எ.டு. இருளில் ஒளி புரையும்.

புரோகிதன் - வைதிக வினை செய்பவன்.

புரோதாயம் - உடலை சுத்திக்காகச் செய்யும் விடியற்காலத்து சடங்கு குளியல்.

புலப்படக் காண்டல் - வெளிப்பட்டுத் தோன்றக் காண்டல்.

புலப்படுதல் - அறிவித்தல்.

புலவர் - அளவை நூல் உணர்ந்தோர்.

புலன் - பொறிநுகர்வு. கண்பார்த்தல், செவி-கேட்டல் மூக்கு- முகர்தல், நாக்கு சுவைத்தல், மெய் ஊறு.

புலன் ஐந்து - ஊறு, சுவை, பார்த்தல், கேட்டல், முகர்தல்.

புலன் மூன்று - தொழில், அறிவு, விழைவு.

புலனிகந்த காட்சி - அறிவியல் காட்சி அல்லது யோகக் காட்சி சார்ந்தது. இதுபற்றி இன்று மேலை நாடுகளில் முறையாக ஆய்வுகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. சைவசித்தாந்தம் பயில்வோர் அறிவியல் காட்சி, சிவஞான காட்சி ஆகிய இரண்டையும் ஊன்றிக்கற்பது நல்லது.

புல்லறிவு - சிற்றறிவு.

புலிஅதள் - புலித்தோல் ஆடை

புலியூர்கள் - 1) பெரும் பற்றப் புலியூர் (சிதம்பரம்) 2) திருப்பாதிரிப் புலியூர் 3) ஓமாம் புலியூர் (சிதம்பரம்) 4) எருச்சத்தம்புலியூர் 5) பெரும் புலியூர்,

புலைச்சி - இழியவள்.

புலையர் -இழிந்தார்.

புவனம் - உலகம் என்று சிறப்பாக கூறப்படுவது. இது 224, 36 தத்துவங்களிலும் புவனங்கள் உள்ளன. அவற்றில் அவற்றிற்குரிய தகுதியாளர் வாழ்கின்றனர். ஒவ்வொரு புவனமும் பல அண்டங்களைக்கொண்டது.

புவனத்துவா - புவன வழி. அத்துவா 6இல் ஒன்று.

198