பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூசனை, பூசை

பூதம்5

கட்டிய கோயிலின் குட முழுக்கு நாளையும் மாற்றி வைக்கச் செய்தவர். இலிங்க வழிபாடு (63).

பூசனை, பூசை - பூ கொண்டு வழிபடுதல். இது அகப்பூசை, புறப்பூசை என இருவகை முன்னதில் பருப்பூக்களும் பின்னதில் கற்பனைப் பூக்களும் பயன்படும். இவற்றில் வெவ்வேறு மந்திரங்களால் வெவ்வேறு செயல்கள் செய்யப்படும். அத்தகைய பூசை கிரியா பூசை எனப்படும். சிவன் மேனி வெவ்வேறு மந்திரங்களால் கற்பிக்கப்படும்.

பூசை,ஞான - இதில் அஞ்செ ழுத்து மந்திரம். ஒன்றே எல் லாச் செயல்களுக்கும் விதிக்கப் பட்டுள்ளது.
அஞ்செழுத்தால் உள்ளம் அரன் உடைமை கண்டு

   அரனை அஞ்செழுத்தால் அர்ச்சித்து இதயத்தில் 
   அஞ்செழுத்தால் குண்டலியிற் செய்து ஓமம் 
   கோதண்டம் சானிக்கில் அண்டனாம் சேடனாம் அங்கு ( சிபோ பா 59)

பூசாத்துதல் - எட்டுப்பூக்கள் சாத்துதல். புறப்பூசையில் அதற்கு உண்மையான எட்டுப் பூக்கள் சாத்தப்படும். அவை யாவன. புன்னை, வெள்ளெருக்கு,சண்பகம்,நந்தியவட்டை, நீலோற்பவம், பாதிரி அலரி, செந்தாமரை.
அகப்பூசைக்குரிய குணமலர்களாவன: கொல்லாமை, ஐம்பொறியடக்கல், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு.

பூசை அங்கி - பூசைக்குரிய நெருப்பு. ஓமமும் தியானமும் நெருப்பும் பூசையுறுப்புகள். இம்மூன்றும் செய்தற்குரிய இடங்கள் முறையே இதயம், உந்தி, புருவநடு ஆகும்.
பூசைக்காலச்சிறப்புத்தலங்கள் - 1) திருக்குற்றாலம் திருவனந்தில் சிறப்பு. 2) இராமேச்சுரம் - காலை பூசைச் சிறப்பு 3) திரு ஆனைக்கா - மதியப் பூசைச் சிறப்பு 4) திருஆரூர் சாயுங் கால பூசைச் சிறப்பு 5) மதுரை - இராக்கால பூசைச் சிறப்பு 6) சிதம்பரம்-அர்த்த சாம பூசைச் சிறப்பு.
'பூஞை - பூனை.
பூட்கை -மாறுகோள். எ-டு ஓடாப் பூட்கை நாடி பூட்டு- அரை.
பூட்டுவிற் பொருள்கோள் - வில்லின் நுனியும் அடியும் நாணினால் தொடர்பு கொண்டு இருப்பது போல், இறுதியும் முதலும் தொடர்பு கொண்டு பொருந்துதல். இது செய்யுளுக்குரியது. சிவஞானபோதத் தில் பசு உண்மை கூறும் 3ஆம் நூற்பாவில் ஆன்மா என்னும் இறுதியும் உளது என்னும் முதலும் தொடர்புபட்டு ஆன்மா உளது என்னும் பொருளைத் தருவது.
பூண் -பூணுதல், அணிகலன்,திருவருள்.
பூத -கடந்த காலம்.
பூதம் -1) பூதப்பொருள், மூலப்பொருள்2) பேய்.
பூதம் 5-வான் (ஆகாயம்), காற்று (வாயு), தீ (தேயு)நீர்(அப்பு), நிலம் (பிருதிவி).

200