பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போக்கிய கன்மம் பெளத்தம்

போக்கிய கன்மம் - கன்மமலத்துள் ஒன்று.
போக்கிய (போக) காண்டம் - பா. காண்டம்.
போக்கு-இறப்பு. எ-டு போக்கு வரவு புரிய (சிபோநூபா 2)ஒ.வரவு
போகி- 1) நுகர்வோர் ஒ.யோகி பா. ஆணவம் 2) உருவத் திரு மேனிகளில் ஒன்று. உமையொரு பாகனாக இருந்து உயிர்களுக்கு இன்பந்தருதல்.
போசதேவர் - சிவதத்துவத்தை விளக்கிய அறிஞர்.
போசராசன் -கல்விமான், தாராதி பதி. கி.பி. 1018-1060. தத்துவ பிரகாசிகை என்னும் நூல் இயற்றியவர். இது சித்தாந்த சைவ மதத்தை நிறுவுவது. இதற்குச் சோழநாட்டு அகோர சிவாசாரியரும் குமாரதேவரும் இயற்றிய உரைகள் உள்ளன. பின்னவர் இயற்றிய உரை வெளிவந்துள்ளது.
போதம் - உயிர் உணர்வு, ஐயம் அகற்றல் எ-டு சிவஞானபோதம், துகனபோதம் போதமே பொருளாய்த் தோன்றும் பொருள தாய் எழலால் போதம் (சிசி LIL | 135).
போதரும் - புலப்படும்.
போதல் -வருதல்.
போத்திருத் தத்துவங்கள் -இன்ப துன்பங்களை நுகருந்தன்மை. இதனை ஆணவம் நிகழ்த்துபவை. போதி -1)போதி மரம். புத்தர் அமர்ந்து ஞானம் பெற்றது. 2) அருள் அறம்5) பெளத்தசமாதி
போதித்தல் -அறிவித்தல்.
போது -1) காலம் 2) மலரும் அரும்பு.
போந்தது - வந்தது.
போந்த பயன்- பெறப்பட்ட பயன்.
போம் - போகும், நீங்கும். சாவி போம்
போம் ஆறு -போகுந்தன்மை, வழி.
போய் -பொய்.
போலி-அனுமானத்தில் நிகழும் பிழை. இது மூவகை 1) பக்கப் போலி-4(2) ஏதுப்போலி -21 (3) உவமைப் போலி 18 தோல் வித்தானம் 22யும் சேர்க்க போலி 65. இது சிவஞான சித்தியார் கணக்கு (சிசிசுப20)
போழ்தல் - பிளத்தல்.
போற்றிப் பஃறொடை -முழு முதற் கடவுளாகிய சிவன், ஆன் மாக்களின் பாசத்தை நீக்கித் தன்பால் அவற்றை ஏற்கும் முறையில் பல வகையிலும் கூறும் நூல். போற்றி -பாது காத்தல், பஃறொடை பல் தொடை 95 கண்ணிகளைக் கொண்டது. தோத்திரமும் சாத்திரமுமாகும்.14போற்றிகள் உள்ளன. இதற்குப் பழைய உரை ஒன்றுள்ளது. ஆசிரியர் உமாபதி சிவாசாரியார்.
போனகம்- கடவுளுக்குப் படைக்கும் உணவு.
போனகக்குருத்து-கடவுளுக்கு அமுது படைக்கும் வாழை நுனி இலை.

பெள

பெளடிய - வருங்கால பெளடியம் - இருக்குவேதம் பெளத்தம் - புத்தம், பெளத்த மதம் உண்மையை உணர்தலே ஞானம். அந்த ஞானம் வந்தால்


207