பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மந்திர சுத்தி

மலபரிபாகம்


மந்திர சுத்தி -1) மூல மந்திரம், பஞ்சப்பிரம மந்திரங்கள்,சடங்கு மந்திரங்கள் ஆகியவற்றை முறையோடு உச்சரித்தல் 2) 5 சுத்திகளில் மந்திர நீரால் சுத்தமாக்கும் செயல்.

மந்திரமகேசர் - சதாசிவ மூர்த்தியால் மந்திரருக்குத் தலைவராக அமர்த்தப்பட்டுச் சுத்த தத்துவாவில் இருப்போர்.

மந்திராத்துவா - அத்துவா6இல் ஒன்று. மந்திர வடிவமானது.

மந்திராபிடேகம் - அனுட்டான வகை.

மந்திர வாதம் - மந்திரமே பரம் பொருள் என்று கொள்ளும் சமயம்,

மந்திரி - அமைச்சர்.

மதி - பிறைத்திங்கள்.

மதியாதார் - அசுரர்.

மதுகை - வலி,

மமகாரம் - எனது என்னும் செருக்கு பொருள்களை எனது எனது என்று பற்றி உரிமை கொள்வது.

மம்மர் - கல்லாமை, மயக்கம்.

மயக்கம் - தெளியாமை. பா. மருள்.

மயக்க வாசனை - திரிபு அறிவு.

மயர்வு - மயக்க வாசனை.

மயல், மயர்வு - மயக்கம், காமம், பயம்.

மயிர்க்குட்டி - கம்பளிப்புழு,

மயில் - மயிலின் அண்டம்

மயிலின் அண்டம் - மயிலின் முட்டை நீர்.

மரப்பாவை இயக்கம் - மரப் பாவையின் அசைவு, அதை இயக்குபவர்.

மரப்புல்லூரி- புல்லுருவி.

மரபு - வழி.எ-டு முனிமரபு.

மரிதொண்டதார்யர் - கி.பி. 14. சித்தாந்தசிகாமணி உரையாசிரியர்.

மரிப்பார் - நினைப்பார்.

மரீஇ - கலந்து உறவு கொள்க. எடுஅன்பரோடு மரீஇ (சிபோ நூ. பா 12).

மரு இயல் - குற்றம் பா. உருஇயல், அருஇயல், இருஇயல்.

மருத்து - காற்று.

மருவார் - குற்றமில்லாதவர்.எ-டு மருவார் மறைக் காட்டில் வாசல் திறப்பித்தல்.

மருள் - 1) மயக்கம் 2) குறிஞ்சி யாழ்த்திறம்.

மருள் கொண்ட மாலையாய் - மருளாகிய பண்ணை வண்டுகள் அமர்ந்து பாடப்பட்ட மாலையினை உடையான்.

மருவு - தலைப்படு.

மருவுவன் - தலைப்படுவன.

மருள்சித்தர் - பழைய வீரசைவ ஆசாரியார்.

மலக்கதிர் - மும்மலத்தார்.

மலகன்மம் - பாமலம்.

மலக்கயம் - மலவினை.

மலத்திரயம் -மும்மலம்

மலபரிபாகம் - மலமுதிர்வு. இதற்குக் காரணம் வினை ஒப்பு. ஆணவ மல காரியமான மோகம் முதலாகக் கூறப்பட்ட தீய குணங்கள் ஆன்ம அறிவை விட்டு நீங்குதல். ஆணவமலம் முதிர்ந்து நீங்குவதற்கு ஏதுவாதல். இதனைத் தொடர்வது சத்திநிபாதம். வினை ஒப்பு, மலபரிபாகம், சித்திநிபாதம் ஆகிய மூன்றும் தொடர்நிகழ்ச்சி

211