பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்தக் கரணான்மாவாதம்

அநிந்தியானந்தம்


அந்தக் கரணான்மாவாதம் - அந்தக் கரணங்களே ஆன்மா என்னும் கொள்கை. இக்கொள்கையினர் அந்தக் கரணான்மாவாதி

அந்தகாரம் - இருள்

அந்தணர் - அறவோர். உயிரிடம் செந்தான்மை பூண்டு ஒழுகு பவர்.

அந்தணர் தொழில்- ஒதல், ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஈவித்தல்

அந்தபுரம் - அரசி உறைவிடம்

அந்தம் - முடிந்த முடிபு நெறி முறை. இறைவன். சித்தாந்தம் வேதாந்தம், நான்காம் சத்திநி பாதம்.

அந்தரம் - வானம்.

அந்தம் - முடிந்த முடிபு நெறி முறை. இறைவன். சித்தாந்தம் வேதாந்தம், நான்காம் சத்திரி பாதம்.

அந்ததர - சித்தாந்த மாணவனே

அந்ததரம் - 1. பெரும்பெயர். சைவசித்தாந்த மகாவாக்கியம் சித்தாந்தத்தில் அதன் பொரு ளைச் சுருக்கமாகக் கூறல், 2. சித்தம் 3. தீவிரதரத்தில் தீவிர தரமான சத்திநிபாதம்.

அந்தர சைவம் - சைவ பேதம்.

அந்தரர் - தேவர்.

அந்தராத்மா - கடவுள்.

அந்தரி - பார்வதி.

அந்தரியாகம்- உட்பூசை மான பூசை.

அந்தரியாமி - உயிருள் உயிராய் இருந்து இயங்கும் இறைவன்.

அந்திநிறம் - செக்கர் வானம் போன்ற சிவப்புத்திருமேனி.

அந்திய சைவர் - சிவ தீக்கை பெற்றவர்.

அந்நிய பாவனை - அந்துவித பாவனை.

அநந்தியம்- வேறாகாமை.

அந்நிய சாதி- வேற்றுச்சாதி,

அந்நியம்- வேற்றுமை.

அந்நியமின்மை - ஆன்மாவுக்கும் முதல்வனுக்குமுள்ள தொடர்பு அத்துவிதத் தொடர்பு

அந்நியர் - வேற்றவர்.

அந்நியோர் ரியாஸ்ரயம்- ஒன்றினை மற்றொன்று பற்றுதல்.

அநாதி - தொன்மை, கடவுள், ஆதி.

அநாதி சித்தன் - அநாதியே உள்ளவன்.

அநாதி சைவம் - சைவம் 16 இல்1.

அநாதி நித்தம் - அநாதியாய் இருக்கும் நித்தியம்

அநாதி பந்தம் - அநாதியாய் உள்ள பாசக் கட்டு.

அநாதிபெத்தசித்து- அநாதியே ஆணவ மலத்திலே கட்டுண்டு கிடக்கும் ஆன்மா.

அநாதி போதம் - இயல்பாகவே அறிவுடைமை.

அநாதி மல முத்தர் - இயல் பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவர்

அநாதிமுத்தத்துவம்- இறைவன் குணங்களில் ஒன்று.அது இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியிருக்கும் தன்மை.

அநாதை - சிவசத்திபேதம்.

அநான்ம வாதி - ஆன்மா என்று ஒரு பொருள் இல்லை என்று கூறுபவன்.

அநித்தம்- நிலையாமை.

அநிந்தியானந்தம்- சிற்றின்பம்.

14