பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அநியமம்

அப்பர்


 அநியமம்-ஒழுங்கின்மை, எ-டு: அடர்ச்சி மிகும் கெளரவம் அநியமம் இவை அடைவே (சிபி 42).

அநியத போக்கியம் - முதலில் நல்லதாகக் கருதப்பட்டுப் பின் அல்லாதென என்று தள்ளப்பட்ட கர்ம பலன்.

அநிர்வசனம், அநிர்வசனியம் - இன்னது என்று திட்டவட்டமாகக் கூற இயலாத பொருள். எ-டு பதிப்பொருள் அநிர்வசனமன்று. சிவமே மாயை அதிர்வசனம் என்பது சங்கரர் கொள்கை.

அந்நுவயம்-அன்வயம் இயைபு. எ-டு புகையால் அனல் உண்டு. அடுக்கனைபோல் என்று கூறுதல். (சிசி பப 17).

அநு(னு)க்கிரகம் - 1. தெய்வ அருள் 2. சிவனின் 5 கிருத்தி யங்களில் ஒன்று. பசுவாகிய ஆன்மாவில் மலம் நீங்கிச் சிவ தத்துவம் வருவித்தல் அது.

அநு(னு)கூலம் - இணக்கம்,நன்மை.

அநுணு)பவம் - பட்டறிவு

அநு(ணு)பூதி - 1. தானே கண் டறிவது; பிறர்க்குச் சொல்ல இயலாததுமான அறிவு. அதுணு)லப்தி-இல்லை என்றுஅறியும் முடிவு.

அநு(னு)வாதம் - முன் கூறிய தைப் பிறிதொன்று கூறுவதற்காகப் பின்னும் எடுத்துக் கூறுதல்.

அநேகசுரவாதம் - உலகிற்குக் கர்த்தாவாகிய சங்ககாரக் கட வுள் பல என்னும் கொள்கை. இக்கொள்கை உடையவர் அநேகசுரவாதி.

அநேகம் - பல, வேறு.

அநேகன் - 1. கடவுள். பலவாய் இருப்பவன். எ-டு. ஏகனும் ஆகி அநேகனும் ஆனவன் (திஉ 5) 2 ஆன்மா.

அநேகாந்த வாதம் - அருமத வாதம் ஒரு முடிவைக் கூறாமல் பல முடிவுகளைக் கூறுதல். அநேக அந்தம் பல முடிவு. இம்முடிவைக் கூறுபவர் அநேகாந்தவாதி.

அந்நெறி-அப்பெத்தி நிலை எடு அவனே தானே ஆகிய அந்நெறி ( சிபோபா 10).

அநேகாந்தவாதி-அநேகாந்தக் கொள் கையுடைய வன். அதாவது, அருகனே கடவுள் என்பவர்.

அபகரித்தல் - கவர்தல்.

அபக்குவம் - பக்குவமின்மை.

அபரசாதி-குறைவு உடையவைகளிலே தோன்றுவது.

அபரஞானம் - பசு ஞானம்,பாச ஞானம் ஒ. பதி ஞானம்.

அபர முத்தி - பரமுத்தி, சுத்த தத்துவங்களில் பெறும் வாழ்வு

அபயம் - அருள்.

அபய முத்திரை - அபயமளித் தலைக் காட்டும் கைக்குறி.

அபவர்க்கம் - முத்தி,

அப்பன் - இறைவன், தந்தை.

அப்பர் - இயற்பெயர் மருள் நீக்கியார். இறைவன் தந்த பெயர் திருநாவுக்கரசர். வட மொழியில் வாகீசர் என்பர். வேளாளர். திருவாரூர் - சோழ நாடு சிறப்புப் பெயர் தாண்டக வேந்தர். உழவாரப் படையாளி. முதலில் பாடிய பதிகம் “கூற் றாயினவாறு" படி,ஞானத்தில்

15