பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முலப் பிரகிருதி

மூவகைக் காரணம்


கொள்கை. இக்கொள்கையை ஏனைய வேத மதங்களும் ஒப்புக் கொள்கின்றன.

2) சைவசித்தாந்தக்கொள்கை. இது அசுத்தமாயையின் காரியமான கலை, கலை என்னும் தத்துவத்திலிருந்து தோன்றுவது. சுத்த மாயை, அசுத்த மாயை என்னும் இயற்கை மாயை இரண்டுடன் இப்பிரகிருதியையும் சேர்த்து மும்மாயை என்று சைவசித்தாந்தம் கூறும்.

விளக்கம்

மூலப்பிரகிருதி ஒரு தத்துவமே இது சத்துவம், இராசதம் தாமதம் என்னும் முக்குணங்களையே வடிவாகக்கொண்டது. இம்முக்குணங்கள் வெளிப்படாத நிலை அவ்வியத்தம் எனப்படும். அம்மூன்றும் வெளிப்பட்டுச் சமமாய் நிற்கும் நிலை குணதத்துவம் ஆகும். இக்குண தத்துவமே சித்தம் என்றும் அந்தக் கரணம் என்றும் கூறப்படும். மனம் என்கின்ற அதுவே சிந்தனை செய்யும் பொழுது சித்தம் எனப் பெயர் பெறுகிறது என்பார் சிவஞான முனிவர்.

பெயர்க் காரணம்: கலையிலிருந்துதோன்றுவதால், இதற்கு இப்பெயர். மொழியப்படும் தத்துவங்களுக்கு எல்லாம் இது முதல் காரணம் ஆதல் பற்றி இது பிரகிருதி மாயை என்றும் கூறப்படும்.

அகக்கருவித் தோற்றம் 1) புத்தி: சத்துவகுணத்தை மிகுதியாகவும் ஏனையவற்றைக் குறைவாகவும் கொண்டு தோன்றுவது 2) அகங்காரம் : புத்தியினின்று இராசத குணம் மிகுதியாகக் கொண்டுதோன்றுவது இது 3) மனம்: அகங்காரத்தின் சத்துவக் குணக்கூறில் தோன்றுவது இது.

மூலமலம்- ஆணவம் அறிவதற்கு மூலத் தடையாக இருப்பதால், இதற்கு இப் பெயர். அறியாமை ஆணவம் என்று உண்மை விளக்கம் இதனை உரைக்கும்.

மூலாதாரம் - மூலம்.

மூலை - முற்றம் மூலை-மூலாதாரம் முற்றம்- நிராதாரம், மூலாதாரத்தில் மயங்கிக் கிடக்கும் உயிரை முறையாக நிராதாரத்தில் செலுத்தித் திருவருளில் அழுந்தி நிற்போரே சாலப்பெரியவர் ஆவர். அவரே தவத்தில் தலைவராவார். நிராதாரம் செல்லும் அளவும், அலைந்து நிற்கும் உயிர் திருவருளால் அதன்கண் நிற்பின் அலைவற்று நிற்கும் (அருணைவடிவேலு முதலியார்) எ-டு மூலை இருந்தாரை முற்றத்தே விட்டவர் (திப 12)

மூவகை அணு- மூவகை உயிர்கள்; விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர். ஒ. அகலர்.

மூவகை உணர்நிலை- பா. மூன்று வகை உணர் நிலை.

மூவகைக் காரணம்- முதற் காரணம் துணைக் காரணம், நிமித்த காரணம், உலகமாகிய காரியத்திற்கு மாயை முதல் காரணம். இறைவன் நிமித்த காரணம். அவன் ஆற்றல் அவனுக்குத் துணைக் காரணம். ஒரு காரியம் நடைபெற இம்மூன்று காரணங்களும் தேவை பா. காரணம்.

223