பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மெய்

மெய்கண்டார் நிலையம்



மெ

மெய்- 1) உயிர், எழுத்து, பருவுடல், முதல்வன், உண்மை, தத்துவம் 2) வெண்ணிறு, வேடம், பூசை 3) இயற்கை உணர்வு

மெய்யுணர்வு- உயிர்கள் உடைமைப் பொருள். இறைவன் உடைய பொருள். இந்நிலையை உணர்தலே மெய்யுணர்வு என்பது சைவசித்தாந்தம்.

மெய்கண்டசாத்திரங்கள்- இவை14 சைவ சித்தாந்த நூல்கள். 1) திருவுந்தியார் 2) திருக்களிற்றுப்படியார் 3)சிவஞானபோதம் 4) சிவஞான சித்தியார் (பரபக்கம் சுபக்கம்) 5) இருபா இருபஃது 6) உண்மைவிளக்கம் 7) சிவப்பிரகாசம் 8) திருவருட்பயன் 9) வினாவெண்பா 10) போற்றிப்பஃறொடை 11) கொடிக்கவி 12) நெஞ்சுவிடு தூது. 13) உண்மைநெறி விளக்கம் 14) சங்கற்ப நிராகரணம். மெய்கண்ட சந்தானத்தில் தோன்றியதால் இவற்றிற்கு மெய் கண்ட நூல்கள் என்று பெயர். இவை சிவாகமத்தின் ஞான காண்டம் பொருளைச் சுருக்கி இனிது விளக்கும் தமிழ் நூல்கள். வேதத்தின் ஞான காண்டப் பொருளை உள்ள படி அறிவிக்கும் தமிழ் நூல்கள் தேவாரமும் திருவாசகமும் ஆகும். இவை இரண்டும் தமிழ் வேதமாகும்.

மெய்கண்டார்- வேளாளர். திருப்பெண்ணாகடம். வேறுபெயர். சுவேதனப் பெருமாள். சிறப்புப் பெயர்; திருவெண்காடர், சைவ சிகாமணி. இவர்தம் குருபரஞ் சோதி முனிவர். இவர் தம் அருளுரை பெற்று மெய்கண்டார் என்னும் பெயர் பெற்றவர். திருஞானசம்பந்தரைப் போல் இவர் ஈராண்டிலேயே சிவஞானம் பெற்றவர். தமிழுலகம் உய்ய வேண்டிச் சிவ ஞானபோதம் என்னும் சைவ சித்தாந்த முதல் நூலை அருளினார். இவர்தம் மாணாக்கர் 49பேர். முதல் மாணாக்கர் சகலாகமபண்டிதர். அருள்நந்தி என்னும் பெயர் சூட்டப்பட்டவர். சிவஞான போதத்திற்குச் சிவஞான சித்தியார் என்னும் வழிநூல் அருளியவர். மெய்கண்டார் காலம் 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதி.

மெய்கண்டார்நிலையம்- இஃது ஒர் ஆலயம், மெய்கண்டாருக்காக அவர் பிறந்த பெண்ணாகடத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதன் பரப்பு 1 ஏக்கர் 15 செகண்டு 1-5-1952இல் இவ்வாலயம் கட்டப்பட்டது. இதில் மெய்கண்டாரைப் பிரதிட்டை செய்து குடமுழுக்கு நடைபெற்றது. இங்குச் சைவ சித்தாந்தசாத்திரங்களின் சொற் பொழிவு முறைப்படி விளக்கப்பட்டு வருகிறது; தருமை ஆதீனைக்கட்டுப்பாட்டில் உள்ளது. இது சிறந்த ஆராய்ச்சி மையமாக வளர்வது மிக இன்றியமையாதது.

தவிரச் சென்னை அண்ணா சாலையில் (603) உள்ள சைவ சித்தாந்த ஆய்வு நிறுவனம், சென்னைப் பல்கழகம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் சைவ சித்தாந்தத் துறைகள், தருமை ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம் ஆகிய இரண்டின்

225