பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மெய்ஞ்ஞானக்கள்

மெய்யுணர்வு ஆய்வு


மெய்ஞ்ஞானக்கள் - மெய்யறிவுத்தேறல்

மெய்யடியார் - உறுவது நீற்றின் செல்வம் எனக் கொள்ளும் உளம் உடையவர்கள் பெறுவது சிவன்பால் அன்பாம் பேறு எனக் கருதி வாழும் பெற்றியர். இவ்விரண்டையும் இவர் உள்ளகத்துக் கருதாது பழிக்கவும் செய்வர். ஆதலின் இவர்கள் இழிந்தவர்களானார்.

மெய்த்தவம்- ஐயன் உணர்வினார் உணரும் தவம். ஏனைய தவங்கள் மெய்யாகா.

மெய்த்தவர்- சிவஞானி, மெய்ஞ்ஞானி, இவர்களை ஊழ்வினை மேவர்.

மெய்த்தேவே - மெய்கண்ட தேவனே.

மெய்ந்நூல் வழியளவை - மிருதி, புராணம் கலை, சுருதி, வேதம், சிவாகமம் முதலியவை.

மெய்ப்படும்- உள்ளதும்போகும்.

மெய்ப்பாவகன்- உண்மைப் பாம்புப் பிடாரன்.

மெய்ப்பொருள்- பரம்பொருள்.

மெய்ப்பொருள் நாயனார் - மலையமான். திருக்கோவலூர் நடுநாடு சிவனடியார்களின் திருவேடத்தையே சிவ பெருமானாகக் கருதி வழிபட்டவர். சங்கமே வழிபாடு(63).

மெய்ம்மைக் கொள்கை - மெய்யறிவுக் கொள்கை மேனாட்டு அளவை இயலில் மெய்ம்மை பற்றி 3 கொள்கைகள் நிலவுகின்றன.அவையாவன; 1) தொடர்புக் கொள்கை, நம் நுகர்வில் உள்ள பொருள்களுக்கு நேர் இணையான பொருள்கள் உளவா எனச் சரிபார்ப்பதைச் சார்ந்தது. 2) இணைவுக் கொள்கை நுகர்வில் பெறப்படுபவை தம்முள் ஒருங்கியைந்திருத்தல். 3) நடைமுறைக் கொள்கை; இது பயன் வழிக் கொள்கை. பேரா. எஸ். எஸ். சூரிய நாராயண சாத்திரியார் சைவசித்தாந்தத்தில் மெய்ம்மை என்னுந்தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். சைவ சித்தாந்தம் இணைவுக் கொள்கையைப் பின்பற்றுவதாக அவர் கருதுகிறார். அனைத்தையும் சேர்க்கும் முறையில் ஒன்றையும் விடாது உள்ளீடாகக் கொள்வதில் சாருவாக தரிசனத்தையும் சித்தாந்தம் ஏற்பதையும் அவர் குறிப்பிடுகின்றார்.

மெய்ப்பொருள்- செம்பொருள்.

மெய்ப்பொருளியல்- எப்பொருளையும் ஊடுருவி ஆராய்ந்து அதன் உண்மை இயல்பைக் காண்பது. மெய்ப்பொருளியல் அறிவியலின் தந்தை. வேறுபெயர் தத்துவ இயல், மெய்யறிவியல், மெய்யுணர்வியல்.

மெய்ம்மை- பேரன்பு, மெய்ம்மைச் சிவயோகம்.

மெய்யர்(ன்) - கடவுள், ஞானி.

மெய்யறிவியல் - பா. மெய்ப்பொருளியல்.

மெய்யாதி - ஐம்பொறிகள். ஒ.பூதாதி.

மெய்யுணர்வு - பேருணர்வு, இறையுணர்வு, உண்மையறிவு.

மெய்யுணர்வு ஆய்வு- மேனாட்டுக் காரணகாரிய மெய்யுணர்வு ஆய்வில் வடிவம், பொருள், நிமித்தம், மார்க்கம் என்னும் நான்கு கருத்துகள் வலியுறுத்தப்படுகின்றன. அவற்றுள்

227