பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மெய் வைத்த சொல்

மொய் வரை


நோக்கம் எதன் பொருட்டுக் காரியம் செய்யப்படுகிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. இக்கருத்தை நாம் நிமித்தம் என்னும் சொல்லிலிருந்தே பெற வேண்டும். நிமித்த காரணம் என்னுந்தொடரை வினைமுதல்வன் என்னும் பொருளிலும், அவ்வினை எதன் பொருட்டு, எந்நோக்கம் நிறைவேறுவதற்காகச் செய்யப்படுகின்றது என்னும் பொருளிலும் கொள்ளலாம்.

மெய் வைத்த சொல் - வாய்மைச் சொல் திருவள்ளுவர் சொல்

மெல்ல- மெதுவாக

மெல்வினை- புண்ணியம். ஒ.வல்வினை.

மெள்ளவே- பையவே.

மே

மேகன், மேகம்- மேகநோய்.

மேதக்கோர் - மேலானவர்.

மேதி - எருமை.

மேதினி - உலகு.

மேதை- 1) அறிஞர் 2) கொழுப்பு.

மேலன- முன்னர்த் தோன்றும் தத்துவங்கள். ஒ. கீழன.

மேலாலவத்தை- மூன்று அவத்தைகளில் ஒன்றான ஏறு அவத்தை மேல் நோக்கி நடைபெறுவது. அதாவது, ஆன்மா மேல் நோக்கி ஏறுவது. வேறு பெயர் மேல் நோக்கு அவத்தை ஒ. கீழாலவத்தை

மேவா- பொருந்தா, எ-டு மேவாவினை.

மேவா வினை- மெய்ஞ்ஞானிகளுக்கு ஊழ்வினைகள் வந்து பொருந்தா.

மேளித்தல்- கூட்டுதல்,கலத்தல்.

'மேற்கோள் - தான் கொண்ட கொள்கையை நிலைநாட்டப் பயன்படுவது. சிவஞானபோத நூற்பா அதிகரணத்தின் ஒர் இன்றியமையா உறுப்பு, ஏனைய இரண்டுஏது, எடுத்துக்காட்டு

மேற்கோடல்- ஏது, எடுத்துக்காட்டு முதலியவற்றில் சாதிக்கப்படும் தன்மை உண்மை எனில், மற்றைய போலி உறுதிகளை வென்று ஏற்புடன் மேற்பட்டு எழுதுதல்.

மை

மைதுனம்- புணர்ச்சி, கோபம்

மைப்படி - இருள், குற்றம் எ-டு மைப்படிக் கண்டன் அண்டன் (சிசிபப 301).

மைப்படி கண்டன்- நீலகண்டன்.

மையல் - மயக்கம். எ-டு மையல் மானுடர் செருக்கு.

மொ

மொழிபெயர்த்தல்- ஒரு மொழியிலுள்ள பொருளை மற்றொரு மொழியில் கூறுதல். எ-டு Warm-Glooded animal- வெப்பக் குருதி விலங்கு.

மொழியாக்கம் - ஒரு மொழியிலுள்ள பொருள் கருத்துகளை மற்றொரு மொழியில் கோவையாகக் கூறுதல் எ-டு Warm Glooded animal- வெப்பநிலை மாறா விலங்கு.

மொழி மாற்று - புதிய இலக்கிய உத்தி பா. திருஞான சம்பந்தர்.

மொய் - வலிய.

மொய் வரை- வலிய மலை எ-டு மொய்வரை எடுத்தான் மூலம் (சிசிபப289) காட்டில் மலையை

228