பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மொள்

யோகம்


எடுத்துத் திருமால் ஆநிலை காத்தது இங்குக் குறிப்பிடப்படுவது.

மொள்- எடு, எடு உன்னுள்ளே மொள்ளா அமுதாம் என்று உந்தீ பற (திஉ 26).

மோ

மோகம்- ஆன்மாவோடுசகசமாகவுள்ளது. மதம் முதலிய செயல்களுக்கு ஏதுவாகியது அஞ்ஞானம்.

மோகக் கொடி- மோகம் கொடி போன்று வளர்தல் உருவகம்.

மோகருபம்- மோகமாய் இருக்கும் தன்மை.

மோகன்- விரும்பும் இறைவன்.

மோகனம்- மோகனியம் என்னும் கருவி.

மோகினி- அசுத்த மாயை.

மோகனீயம்- எண்குற்றங்களுள் ஆன்மாவுக்கு மயக்கத்தைச் செய்யும் குற்றம்.

மோசித்து - விரும்பி, எ-டு மும்மலத்தை மோசித்து.

மோட்சம் - வீடுபேறு, முத்தி, பிறவா நெறி பா. முத்தி

மோதிரம்- கணையாழிகை அணிகலன்களில் ஒன்று.

மோனந்த- பேசா. மெளன. எ-டு மோனந்த மாமுனிவர்.

யசோவர்மா - சைவத்தை ஆதரித்த வடநாட்டு அரசன். கி.பி. 8

யமுனை - 9 தீர்த்தங்களில் ஒன்று.

யா

யாகம்- வேள்வி. இது 18 வகை பொதுவாகக் கர்மயாகம், தவயாகம், செபயாகம், தியானயாகம் என 4 வகை. இவை அளிப்பது போகம்.

யாக குண்டம்- வேள்விக்குழி.

யாகசாலை - வேள்விச் சிலை.

யாக பாகம்- அவிர்ப்பாகம்.

யாக்கை- உடம்பு, பிறவாயாக்கை பெரியோன்; கடவுள்

யாத்தல்- கட்டுதல்.

யாதனா சரீரம்- உடலில் ஒரு வகை. பா. வேற்றுடல் சரீரம்.

யாப்பு- 1) இந்நூல் கேட்டபின் கேட்பதற்குரியது என்னும் இயைபு 2) யாத்தல் 3) செய்யுள்.

யாப்புறுத்தல் - வலியாக்கல்.

யாமை - ஆமை

யாழ்- பேரியாழ், சகோட யாழ், மகரயாழ், செங்கோட்டி யாழ் என 4.

யான்- யான் என்னும் செருக்கு.

யு

யுகம்- ஊழிகாலம், கிரேதயுகம், திரேதயுகம், துவாபரயுகம், கலியுகம் என 4.

யோ

யோகம்- இது சிவயோகமாகும். இயமம், நியமம், ஆசனம், பிராணா யாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்னும் எட்டுவகைகளில் படிப்படியாக நிற்றல். ஐம்பொறிகளை ஒடுக்கி, உயிர்ப்பை நிலைநிறுத்தி மூலாதாரம் முதலான ஆறு ஆதாரங்களின் உள் வழிகளை அறிந்து

229