பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யோகம்

யோகர்


அவ்விடங்களில் பொருத்திச் சந்திர மண்டலத்திலுள்ள அமுதத்தை உடல் முழுவதும் நிரப்புதல். முழுச் சோதியை நினைத்திருந்து வினைகள் கெடுதற்குரிய நெறியைக் கடைப் பிடித்தால் சிவ உருவத்தைப் பெறுவர். சுந்தரர் யோக நெறியில் நின்றவர். சுருக்கமாகத் திருமேனியைத் தியானித்தல் யோகம் ஆகும்.

யோகம் - கேசரி சாங்கியம். பா.யோகமதம்.

யோகக்காட்சி- அறிவைத் தடை செய்கின்ற மல ஆற்றலை யோகமுறைகளில் ஒருவாறு ஒழித்து, ஒரிடத்து ஒரு காலத்தில் ஆங்கிருந்து மூவிடத்து முக்காலத்துப் பொருள்களையும் காண்கின்ற காட்சியோகக் காட்சியாகும். இது சிவஞான முனிவர் கூற்று.

யோகசம்- சிவாகமம் 28இல் 1.

யோக சமாதி- உடலையும் மனத்தையும் விட்டு ஆன்மா பிரிந்து நிற்கும் யோக நிலை.

யோகசாரர்- புத்தர். அறிவே ஆன்மா என்னுங் கொள்கையினர்.

யோகசாரம், யோகம்- அறிவே (விஞ்ஞானம்) ஆன்மா அல்லது கடவுள் இல்லை என்னுங் கொள்கை. பெளத்த மதப்பிரிவில் ஒன்று. பா. யோக சூத்திரம்.

யோக சூத்திரம் - பதஞ்சலி முனிவர் செய்த நூல். யோக மதம் அவர் பெயரால் பாதஞ்சலம் எனப்படும்.

யோக சைவம் - சைவம் 16இல் 1. தீக்கை பெற்றவன் அட்டமாகயோகம் பயின்று அட்டமா சித்தி பெறுதலைக்கூறும் சமயம்.

யோகதீக்கை- 1) யோக நெறியால் சீடனது உடலுக்குள் குரு சென்று, அவன் ஆன்மாவை ஈர்த்துச் சிவன் திருவடியில் சேர்ப்பிக்கும் வினை. 2) தீக்கை ஏழில், நிராதர யோகத்தைப் பயிற்சி பண்ணுமாறு செய்தல்.

யோகப்படி நிலை - 4 யோகச் செய்திகள்.

1) யோகத்தில் சரியை- இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம் என்னும் நான்கினையும் பழகுதல். 2) யோகத்தில் கிரியை- பிரத்தியாகரம், தாரணை என்னும் இரண்டினையும் பழகுதல். 3) யோகத்தில் யோகம்- தியானம் செய்தல். 4) யோகத்தில் ஞானம்- சமாதி கூடுதல்.

யோகபரர்- ஞானிகள், தவசீலர். ஒத்தாரே யோகபரர் என்பது திருவுந்தியார் வாக்கு.

யோக பாதம் - 1) ஒவ்வொரு சிவாகமத்திலும் யோகத்தைப் பற்றிக் கூறுவதாயுள்ள இரண்டாம் பகுதி. 2) யோகத்தைப் பற்றிக் கூறும் பாஞ்சராத்திர ஆகமப் பகுதி.

யோகபூசை- அறிவின் ஒளியாகச் சிவனைத் தியானித்தல்.

யோகமதம் - பதஞ்சலம். கடவுள் உண்டு என்று நிறுவுஞ்சமயம் வேறு பெயர் கேசரசாங்கியம். கேசரம். ஈசுரனோடு கூடியது.

யோகர்- 1) யோகியர் 2) சமண முனிவர் உருவத் திருமேனி களில் ஒன்று. தென்முகக் கடவுள் இருந்து யோகமுத்திக்கு உதவுதல்.

230