பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்விடம்

வழிபாட்டு நிலைகள்


வல்விடம்- வலிய (கொடிய) நஞ்சு.

வல்வினை- வலிய கன்ம மலம் ஒ. மெல் வினை.

வலி- வலிமை, உயிர்க்கு வலிமை ஊழ்வலி, எ-டு ஊழிற்பெரு வலி யாவுள (குறள் 380).

வலித்தல்- அசைத்தல், ஈர்த்தல், இழுத்தல் எ-டு இரும்பைக் காந்தம் வலித்தல் போல் (சிசிசு 321).

வலிந்துசெல்லும் தொண்டன்- தானே வரிந்து கட்டிக் கொண்டு செல்லும் இறைவன். பரவைக்காகச் சுந்தர மூர்த்தி நாயனார் சார்பில் இறைவன் தூது சென்றது இங்குக் குறிப்பிடப்படுகிறது. (திப 72).

வழக்கு- பிரசித்தி, உலகவழக்கு, செய்யுள் வழக்கு என இரு வகை. பா. இல்வழக்கு.

வழக்குரை- வாதம் ஒரு கருத்தை நிலைநாட்ட அளவை இயலில் கூறப்படும் கூற்று. இது இருவகை 1) உலகியல் வழக்குரை: புற உல கைக் காரியமாகக் கொண்டு காரணங் கூறுவது. 2) அறவியல் வழக்குரை : அற உலகை நெறிப்படுத்துவதற்காக ஒருவன் வேண்டும் என்பது. இவை இரண்டும் சைவசித்தாந்தத்தில் கூறப்பெறுகின்றன. இருவினை காரணமாக உயிர்களின் போக்குவரவு நெறிப்படுத்தப்படுவது இங்குக் குறிப்பிடப்படுவது.

வழக்குரையின் ஏற்புடைமை- இது வடிவமைப்பு பற்றியதாகவும் பொருள் இயைபு பற்றியதாகவும் அமையவேண்டும் இம் முறையில் வடிவமைப்பைச் சிவாக்கிரமயோகியர் உரை எடுத்துக் காட்டுகிறது. பொருள் இயைபு பற்றியது பிறகொள்கையினர் கூறும் தடைகளுக்கு விடை கூறி, மேல் செல்வது வேண்டப்படுகிறது. முதல் நூல் (சிவஞான போதம்) நுட்பமாகச் சொல்வதை வழிநூல் (சிவஞான சித்தியார்) விளக்கமாக எடுத்துரைக்கிறது.

வழங்குதல்- நடைபெறுதல்.

வழி - ஆறு. நூல் வந்த வழி.

வழிபடுதெய்வம்- ஒருவன் தன் குலத்துக்கும் தனக்குமுரியதாக வணங்கும் கடவுள் எ-டு மெய்கண்டார் வழிபடு தெய்வம் பொல்லாப் பிள்ளையார்.

வழிபாட்டு நிலைகள்- இவை வழிபாட்டு முறைகள் ஆகமங்களில் கூறப் பெறுபவை. நோக்கம் மெய்யறிவு பெறுதல் இறைவனை நிலைபெறச் செய்தபின் மேற்கொள்ளப்படும் பணிவிடைகளாவன. 1) ஆசனம்; இருக்கை அமைத்தல் 2) பாத்யம், நீர் தருதல் 3) ஆசமனம் மந்திரநீர்கொள்ளல் 4) ஆர்க்கியம், நீரளித்தல் 5) அபிடேகம்; திருமுழுக்கு. 6) வத்திரம் ஆடை அணிவித்தல் 7) கந்தம்; நறுமணம் இடல் 8) பூ, மலர் சாத்தல் 9) தூபம், புகையிடல் 10)நைவேத்தியம்; திருவமுது படைத்தல் 11) தாம்பூலம்-வெற்றிலை பாக்கு வைத்தல் 12)தர்ப்பணம்-கண்ணாடிகாட்டல் 13) சாமரம், விசிறியால் விசுறுதல் 14) நமக்காரம்- வணங்குதல் 15) பிரதட்சிணம்- வலம் வருதல்

16) விசர்சனம்- வெளியேற்றல்

233