பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வித்து

வியாக்கியானம்


அதனை நுகர்வதற்கு இடமாய் அமைந்த உடம்பு, சிவ தத்துவத்தொகுதி அவ்வுடம்பின் தலையில் அமைந்த நரம்பு மண்டலம் நிவிருத்தி முதலிய ஐந்துகலைகள் தலையினின்று இறங்கி, எல்லா உறுப்புகளையும் பிணைத்து நிற்கும் நாடிகள். இவ்வாறு ஒப்பீடு அமைகின்றது.

வித்து - 1) விதை 2) இறை.

வித்தை - திறம் ஐந்து வித்தைகளில் ஒன்று. அறிவாற்றலை உண்டாக்குவது. இதில் மந்திரம் 2, பதம்20, எழுத்து 7, புவனம் 27, தத்துவம் 7 உள்ளன.

வித்தை மலர் - 8 தத்துவ இதழ்களைக் கொண்ட பூவித்தியா தத்துவம்7 சுத்தவித்தை1ஆக8

வித்தை முதல் - உயிர் இறை அருளால் அறிவது. இம்முதல் ஐவரால் விளங்கும் அறிவு (சிபி 39).

விதி - ஊழ்.

விதி இரண்டு - ஆதாரயோகம், நிராதாரயோகம் என மீதானத்து அமர்ந்த இரண்டு விதி. முன்னது ஆதாரத்தை ஆக்குவது பின்னது ஆக்காதது.

விதிமுகம் - நிருமிக்கும் வாயில்

விதிமுன்று - 1) முன்பொருந்தாத ஒன்றைப் பொருந்த வேண்டும் என்று விதிப்பது 2) முன் பொருந்திய ஒன்று நீங்காமல் இருக்க வேண்டுமென்று விதிப்பது 3) பொருந்தியதில் ஒரு பகுதியை விலக்க வேண்டும் என்று விதிப்பது.

விதிவாக்கியம் - செய்க என விதிக்கும் வாக்கியம்.

விதிக்குஞ்சொல் - விதியைப் புலப்படுத்துஞ் சொல். இதனைச் செய்க என நியமிக்குஞ் சொல்.

விந்து - 1) சித்தம் 2) சிவ தத்துவம் 3) சுத்த மாயை.

விந்து தத்துவம் - சத்தி தத்துவம்

விந்து ஞானம் - சுத்தமாயாகரிய மென நால்வகை வாக்குகளினால் உண்டாகும் சவிகற்ப உணர்வு அல்லது அறிவு.

விநாயகக் கடவுள் - கணபதி.

விபக்கம் - எதிரிடையான கொள்கை. அனுமான உறுப்பில்துணி பொருள் இல்லாத இடம்.

விபரீதம் - திரிபுணர்ச்சி.

விபரீத ஞானம் - திரிபுணர்வு, மயக்க உணர்வு.

விபவம் - செல்வம்.

விம்முதல் - சுரத்தல்.

விமலதை - தூய்மை.

விமலன் - வினை முதல்.

வியஞ்சகம் - துணை.

வியத்தம் - வெளிப்பாடு.

வியட்டி - பிரிவு, பகுதி.

வியட்டிப்பிரமாணம் - பிரணவத்தின் கூறுகளாய் நிற்பதால், அகரம் முதலிய ஐந்தும் வியட்டிப் பிரணவம் எனப்படும்.

வியர்த்தி - அடக்கம் முறையான உடன். நிகழ்ச்சி.

வியவகாரம் - வழக்கம்.

வியனுலகம் - வானுலகம்.

வியாகரணம் - உலகியற் சொல்லையும் வைதிகச்சொல்லையும் ஆராய்வது.

வியாக்கியானம் - உரை.

240